உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

அப்பாத்துரையம் - 30

இச்சமயம் எவரும் எண்ணியிருக்க முடியாது. வழக்கம்போல, வழக்கத்தினும் மிகுதியாக, அரசிபற்றியும் அவள் தோழர் தோழியைப் பற்றியும் இன்று வம்புரையாடிக் கொண்டடிருந்த பாரிஸ் இளமாதர், இளைஞர்கள் கட்டாயம் அதனைப் பற்றிக் கனவு கண்டிருக்க மாட்டார்கள். அவர்களிடையே தலை நிமிர்ந்து சென்று தவிசேறி இறுமாந்து வீற்றிருந்த அரசனும் அரசியும், தம் தலைகளைத் தூக்கு மேடைக்கு அனுப்பவேண்டி வருமென்றோ, தாமும் தன் பெருமக்கள் கோமக்களும் தம்மால் இன்று புறக்கணிக்கப்படும் கீழ் மக்கள் முன் நின்று உயிருக்குக் கெஞ்ச வேண்டி வரும் என்றோ சிறிதும் நினைத்திருக்க மாட்டார்கள். எதிர்கால நுனித்தறியும் நோக்கு மனிதருக்கு இருந்திருந்தால், அன்றைய விழவுக்கொண்டாட்டம்,விழவுக்கொண்டாட்டமாகவே இருந்திருக்க முடியாது.'

வேடிக்கைப் பாட்டுகள், வசைப் பாட்டுகளை மாதர் ஒருவரிடமிருந்து ஒருவர் திரும்பத் திரும்பக் கேட்டு மனப்பாடம் பண்ணிப் பரப்பிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவர் ஆடையணி, நடையுடை, ஆடல் பாடல் வண்ணங்களில் கருத்தைச் செலுத்தி அதனுடன் போட்டியிட்டு மேம்படுவது ஒன்றிலேயே குறியாயிருந்தனர். போக ஒளிவு மறைவான காதல், அதன் விளைவான மறை பிறவினைபற்றிய உரையாடல் உதட்டுக்குதடு நடமாடின.கிரேக்க புராண மரபுப்படி மறை காதலும் அதன் விளைவுகளும் கடலகச் செல்வன் திருவிளையாடல்கள். புதிதாக உயர்குடி நங்கையரிடையே புகழ்பெற்றுவந்த விகட வசைக்கவிஞன் டிபஃவ்வர்ஸ் அத்தகைய திருவிளையாடல்களில் பிறந்தவன் - அத்திருவிளையாடல்கள் பற்றி நகையினிமைத் திறமும் வசைத்திறமும் தோன்றப் பாடி யிருந்தான். அப்பாடல்கள் இத்தகைய கூட்டங்களில் ஊடாடின. லிஸெட் என்ற அரசவை இளவரசி ஒத்தி பற்றிய பாடல் இவற்றுள் ஒன்று. அப்பாடல்:

“மயல்விழியார் லிஸெட்! உன்றன் மாயவலையில் மன்னவையின் மைந்தர் பலர் வதைப்படுகிறார்! கயல்விழியார் கோமகளிர் கண்ணுறுத்தலாம், காரழகி இளவரசி கடுகிச் சீறலாம்!