உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

புயலிடையும் கடற்செல்வன் பொலிந்து பெற்றவன் பொருவில்மண மாதைஎனக் கலைபுகலுதே.

47

இப்பாட்டைக் கோமகள் ஒருத்தியே பாடிக் குறும்புச் சிரிப்புச் சிரித்தாள். 'ஆகா, ஆகா, என்ன அழகிய பாடல் என்ன சொல் நயம்! திரும்பி ஒரு தடவைபாடு' என்று காதல் கோயிலின் மறையின்பமறியாப் புத்திள மங்கையர் பலர் அவளைச் சூழ்ந்து மொய்த்தனர்.

இளவரசருள் ஒருவர் மன்னர் நாகரிக நடையுடையையும் அரசியின் இயற்கை வனப்பையும் புகழ்ந்தார். அவள் பொன்னிற் மயிர் வனப்பில் அவர் ஈடுபட்டார். அது பொறுக்கவில்லை ஓர் இளமங்கைக்கு. "அது இயற்கைப் பொன்னிறமல்ல. புதிதாக வந்த பொன்னிறப் பூச்சு மையின் திறமே அது" என்றாள் அவள்.

66

‘அது உனக்கு எப்படித் தெரியும், அம்மணி?”

“நானும் அதைத்தான் பயன்படுத்தியிருக்கிறேன்” என்று சொல்ல மங்கையின் நா எழவில்லை. “அத்தகையதொரு பொடியை இப்போது பலர் வழங்குவது எனக்குத் தெரியும். மேலும் அரசி முடி வேறு நிறமாயிருந்ததை நான் அறிவேன்” என்றாள்.

"எல்லார் முடியும் வேறுநிறமாகும் காலம் உண்டு” என்றார் முதுமையை எதிர்த்துப் போராடிய பெருமானார் ஒருவர்.

கோமான் சிராம்மோன் வழக்கத்துக்கு மேற்பட நற்பண்பு தேர்ந்த ஆடையணியுடன் வந்து தவிசினருகில் உள்ள தம் இருக்கையில் அமர்ந்திருந்தார்.கோமாட்டி சிராம்மோன் இருக்கை ன்னும் வெறுமையாகவே இருந்தது. அவள் ஒப்பனை தீர்ந்து இன்னும் வரவில்லை. அனைவரும் அவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏன் அவள் இன்னும் வரவில்லை என்று வினவினர் சிலர். சிலர், "குறித்த நேரத்தில் அவள் வந்து சேராமலிருக்க வேண்டும் என்றுதானே சிலர் விரும்பிக் கொண்டிருப்பர்” என்றனர். இங்கே சிலர் என்றது மாது பெரோனையும் மாது பிளான்ஸியையும் தான் என்று கூறத் தேவையில்லை.கிழவனை மணப்பதால் அவள் இறுமாப்படங்கித்தம் மனம்போல நடப்பாள் என்று இருவரில் எவர் நினைத்திருந்தாலும்,