உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

5

கடல் நீரில் மாய ஓவியப் படிவங்களைத் தீட்டியவண்ணமா யிருந்தன.

கடலரசன் தண்பொருநனுக்கு ஆறு புதல்வியர் இருந்தார்கள். கடைசிப் புதல்வி வேல்விழி மற்ற ஐவரையும் விஞ்சிய அழகுடையவளாய் இருந்தாள். கடல் நங்கையரின் உடல் அழகுடன் நங்கையருக்குரிய மன அழகும் அவளுக்கு வாய்ந்திருந்தது. அவள் கடலுலகின் அழகில் ஈடுபட்டு அக் கலைச்செல்வத்தை நுகர்ந்து வளர்ந்தாள். கடலகத்துள்ள வாடா மணிமலர்களை அவள் தன் பலகணியிலும் தோட்டத்திலும் வைத்துப் பயிரிட்டாள். நீர்க் குதிரை, நீர்ச்சிங்கம், பொன்மீன், ஆழ்கடல் நண்டு ஆகிய வனப்புமிக்க உயிரினங்கள் அவள் கையில் ஏறித் தீனி பெறத் தாவின, அவையே அவளுக்கு விளையாட்டுத் தோழர்களாய் அமைந்தன.

வேல்விழிக்குத் தாய் இல்லை. அவளைப் பெற்ற முதல் ஆண்டிலேயே அவள் தாய் தமிழமுது நீருடன் நீரானாள். நுரைவடிவாய் அவள் கடற்பரப்பின்மீது உலவியதாக மற்றவர்கள் கூறினார்கள். நுரை வடிவமாக மிதக்கும் தன் அன்னையையும் முன்னோர்களையும் காண அவள் துடித்தாள். நீர்ப்பரப்பின் மேல் என்ன இருக்கக்கூடும் என்று அறிய அவள் அடிக்கடி ஆர்வம் கொண்டாள். கடலில் ஆழம் குறைந்த இடத்திற்கு அவள் சென்றதில்லை. சென்றால் அலை கடற்கரையில் கொண்டு தள்ளிவிடும் என்று பெரியோர் கண்டித்திருந்தனர். “கரையிலே மனிதர் உலவக்கூடும். அவர்கள் கண்களில் கடற்குழந்தைகள் படக்கூடாது. பட்டால் அவர்கள் உடல் முழுதும் நீராய் உருகிவிடும்" என்று அச்சுறுத்தினார்கள்.

கரையருகிலும் நீர்ப்பரப்பின் மீதும் இறகு முளைத்த மீன்கள் வெட்டவெளியில் நீந்துவதாக அவள் கேள்விப் பட்டிருந்தாள். இவை உண்மையில் பறவைகளே. ஆனால் ஆழ்கடலுலகத்தில் பறவைகள் இல்லாதால், அவற்றை அவர்கள் வெட்ட வெளியில் நீந்தும் இறகு முளைத்த மீன்களாகக் கருதினார்கள். அவற்றில் பல இனிமையாகப் பாடியதைக் கடல்மக்கள் கேட்டதுண்டு. வேல்விழியும் அவ்வழகிய இறக்கை மீன்களின் பாடல்களைக் கேட்க விரும்பினாள். ஆனால் கடற்