உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

9

நோக்கிப் பாய்ந்து சென்றாள். வழக்கமாக அத்தை தரவிருந்த மின்சார விலாங்கைப் பெறக்கூட அவள் காத்திருக்கவில்லை. உண்மையில் எந்த ஊர்தியையும்விட, அவள் உள்ளத்தின் ஆர்வம் அவளை விரைந்து இழுத்துச் சென்றது.

அகன்ற நீல வானையும் கதிரவனையும் கண்டு அவள் நாள்தோறும் களிப்பில் குளித்தாள். எழுந்தெழுந்தடங்கும் கடற்பரப்பு, கரையில் மோதியடித்துச் சிதறும் அலைகள் ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டே அவள் நாழிகைகளைக் கணங்களாகக் கழித்தாள். நிலவின் அமைதியிலும் புயலின் கொந்தளிப்பிலும் அவள் ஆர்வம் பழக்கத்தினால் ஆறவில்லை. அவளிடம் என்றும் புத்தார்வம் பொங்கிக் கொண்டே இருந்தது.

ஒருநாள் தற்செயலாக அவள் ஒரு புத்தம் புதிய காட்சி கண்டாள். அது அவள் வாழ்க்கையையே மாற்றியமைப்பதாய் இருந்தது.

அன்று வானம் ஒரே மப்பும் மந்தாரமுமாயிருந்தது. வான வெளியில் காற்று முற்றிலும் உறங்கிக் கிடந்தது. அலையில்லாத கடல் பச்சைப் பசேல் என ஒரே புல்வெளிபோல் மின்னிற்று; முழுப்பாய் விரித்துச் சென்ற ஒரு கப்பல், காற்றில்லாக் காரணத்தினால், கடலரசன் மாளிகைக்கு அருகிலே கடற் பரப்பில் தயங்கித் தயங்கி மிதந்து கொண்டிருந்தது. கப்பலின் பலகணிகள் வழியாகப் பந்தங்கள்போலப் பல ஒளிவிளக்கங்கள் தெரிந்தன. உள்ளிருந்து பலவகை இசை ஒலிகளும் ஆரவாரங்களும் நீரில் மிதந்து வந்தன. பலகணி ஒளியில் நிழல்கள் அடிக்கடி அப்புறமும் இப்புறமும் விரைந்து சென்றன. அவள் கப்பல் அருகே சென்றாள். கப்பலைச் சுற்றிச் சென்றாள். அடிக்கடி, கடல் வீக்கத்தின்போது, அவள் நீரில் மிதந்து நின்று பலகணிகளின் வழியாக எட்டிப் பார்த்தாள்.

பாண்டியநாட்டின்

அந்தக் கப்பல் உண்மையில் இளவரசனும் கடல் தளபதியுமான செழுங்கோவின் இன்ப உலாக் கப்பலேயாகும். செழுங்கோவின் இருபதாவது ஆண்டுப் பிறந்தநாள் விழாவைக் கடற்படையினர் ஈழ நாட்டுக் கரையிலே கொண்டாடத் திட்டம் இட்டிருந்தனர். கப்பல் ஈழநாட்டின் வடகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. திடுமென எழுந்த கடலின் அமைதி, கப்பலை நடுக்கடலிலேயே நான்கைந்துநாள்