உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

25

அத்தொடர்பு இன்னும் நெருக்க மடையும், ஆகவே எங்களுக்காக, அத்தை பொன்னா விரைக்காக, இந்த ஒரு காரியத்தைத் துணிகரமாகச் செய்யக் கோருகிறோம். அதன்பின் ஆழ்கடலணங்கின் உதவியால், நாங்கள் அனைவருமே நிலவுலக மக்களாய் உன்னுடன் வாழவந்து விடுவோம்" என்றாள்.

வேல்விழிக்கு இந்தத் திட்டம் முற்றிலும் பிடிக்கவில்லை. ஆனாலும் தமக்கையர் நல்லார்வத்தைத் தகர்க்கவும் அவள் துணியவில்லை. வாளை அவள் பெற்றுக் கொண்டாள்.

அன்றிரவு முழுவதும் அவள் உள்ளம் ஒரு போர்க்கள மாயிற்று. "திருகுவளை அவள் காதலுக்கு ஒரு முட்டுக் கட்டைதான். ஆனால் அது அவள் குற்றமன்றே! அவள் காட்டிய இரக்கம், நல்லெண்ணம் ஆகியவற்றுக்கு நான் என்ன கைம்மாறு தான் செய்ய முடியும்? அத்துடன் இளவரசன் அன்புள்ளம் இருவரிடமும் தானே பாசம் கொண்டுள்ளது? திருக்குவளையிடம் அவன் முதற்பாசம் கொள்ளா விட்டால், அப்பாசம் என்னுடையது தானே! அவ்வுள்ளத்துக்கு நான் என்ன விட்டுக் கொடுத்தால்தான் தகாது” என்று அவள் ஒரு சமயம் கருதுவாள், ஆனால் மறுசமயம் தமக்கையர், அத்தை, கடல்மக்களின் வாழ்வு அவள் கண்முன் நிழலாடின. "அந்தோ என் ஒருத்திக்காக அத்தனை பேரும் செய்த, செய்ய இருக்கும் மிகப் பெருந் தன்மறுப்பு எவ்வளவு! அதற்கு மாறாக, நான் இந்த ஒரு செயலைச் செய்யத் தயங்கல் கூடுமா?” என்று அவள் உள்ளம் வாதாடிற்று.

இருவகைச் சிந்தனைகளும் மாறி மாறி எழுந்து முழங்கின.

எதன் வழியும் அவன் உள்ளம் துணியவில்லை.

மணமக்கள் அமர்ந்தனர். செழுங்கோ மாலையைக் கையில் எடுத்தான். திருகுவளை மெல்லப் புன்முறுவல் பூத்தாள். அவன் குனிந்த தலைமீது மாலையிடச் செழுங்கோ எழுந்து நின்றான்.

அவள் உள்ளம் இப்போது ஒரு திசையில் துணிவுற்றது. இளவரசனுக்காக அவள் தன்னை மட்டுமே துறக்க முடிவு செய்திருந்தாள். இளவரசன் உள்ளங் கொள்ளை கொண்ட நங்கைக்காக அவள் தன்னை மட்டுமன்றி, தன் இன முழுவதையுமே பலிகொடுக்க உறுதி கொண்டாள்.