உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

||--

அப்பாத்துரையம் - 32

செய்யப் பட்டிருந்தது. அதில் ஒரு நாடகக் குழு ஆடிற்று. அது நாட்டுப்புறக் குழுவானாலும், மக்கள் பொழுது போக்குக்காக அதைக் கண்டு களித்திருந்தார்கள். இளஞ்சாத்தனும் வழித்துனை வேலனும் கூட்டத்துடன் இருந்து பார்த்தனர். ஆனால் நாடகத்தின் காட்சி நடுவில் இளவரசியாக நடித்தவள் ஆடை தீப்பற்றிக் கொண்டது. தீ உடனே அணைக்கப்பட்டது. அனால் நடிகை ஆட முடியாதது கண்டு, நாடகக் குழுத் தலைவன் வருந்தினான். அச்சமயம் வழித்துணை வேலன் அவனை அணுகினான். “உன் நடிகையின் வெப்பை ஆற்றி இப்போதே என்னால் நடிக்க வைக்க முடியும்.நீ என்ன தருவாய்?” என்றான்.

அவன் ஆர்வமுடன், “என்னிடம் இருப்பது எதுவானாலும் தந்து விடுவேன்” என்றான்.

“உன் அரைக்கச்சையில் தொங்கும் வாளைத் தருவாயா? அது போதும்” என்றான் வழித்துணை வேலன்.

அவன் சிறிது தயங்கினான். பின், "குணப்படுத்தி விட்டால் தரத் தடையில்லை" என்றான்.

வழித்துணைவேலன் தன் மையில் சிறிது நடிகை இளவரசியின் உச்சியில் தடவினான். அவள் வெப்பு உடன் அகன்றது. அதுமட்டுமன்று. அவள் உடனே முன்னிலும் அழகு மிக்கவளாகப் பொலிந்தாள். அவள் பாடியபோது, குரல் பழைய நாட்டுப்புறக் குரலாயில்லை. நகரமங்கையர் குரலும் நாணும் படியாயிருந்தது. ஆடியபோது அந்த ஆடலும் நகர ஆடல் நங்கையரைப் பழி காண்பதாய் அமைந்தது.

அரசு நடிகனும் மற்ற நடிக நடிகையரும் அவள் மாற்றம் கண்டு புழுங்கினார்கள். அவளும் அவர்கள் மாறுபடாமல் தான் மட்டும் தனியழகியாய் இருக்க விரும்பவில்லை. எல்லோரையும் மாற்றியருளும்படி அவள் தலைவனை வேண்டினாள். தலைவன் நாடக முடிவில் வழித் துணை வேலனிடம் புது வேண்டுகோளைத் தெரிவித்தான். வாளின் உறையையும் கேடயத்தையும் கொடு என்று கேட்டுப் பெற்று, அவன் எல்லோரையும் உருமாற்றினான். நாடகக் குழுவினரும் தலைவரும் மிகவும் அகமகிழ்வுடன் சென்றார்கள்.