உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

அப்பாத்துரையம் - 32

ளஞ்சாத்தன் யார் சொல்லும் கேட்கவில்லை. "உலகம் பெரிது. கடவுள் எதையும் முழுவதும் தீங்காகப் படைத்திருக்க முடியாது. அவர் எப்படியும் என்னைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். காப்பாற்றாவிட்டால் கூட, அவர் விட்டவழிப்படி நான் நடப்பதில் கேடில்லை” என்று அவன் கூறியமைந்தான்.

அவன் மன்னனிடம் சென்று, தன் கோரிக்கையைக் கூறினான். சூதுவாதற்ற அவனது இளமுகம் கண்டு மன்னன் மனமுடைந்தான். அவனைத் தடுக்க எவ்வளவோ முயன்றான். ஆனால் இளவரசி தலையிட்டாள்; “என்னை விரும்பி வருபவனை நீங்கள் ஏன் தடுக்க வேண்டும்? அவன் முயன்று பார்க்கட்டும்" என்றாள்.

மறுநாளே முதற்கேள்வி கேட்பதாகக் கூறி அவள் அவனை அனுப்பினாள்.

அன்றிரவு நெடுநேரம் வரை வழித்துணை வேலனுடன் இளஞ்சாத்தன் உரையாடி மகிழ்ந்தான். மறுநாளே வாழ்வில் கடைசி நாளாயிருந்தால், நண்பனுக்கு இந்நாளாவது பிரிவு விழாவாயிருக்கட்டும் என்று அவன் எண்ணினான். இது தவிர அவன் வேறு எதுவும் கவலைப்படவில்லை. தெய்வம் எப்படியாவது உதவக்கூடும் என்ற நம்பிக்கையும் அவனை விட்டு அகலவில்லை. நள்ளிரவு வருமுன் அவன் அமைந்து தூங்கினான்.

வழித்துணை வேலனும் உறங்குவதுபோலச் சிறிது நேரம் நடித்தான். அதன்பின் நள்ளிரவுக்கு அரை நாழிகைக்கு முன்பே அவன் எழுந்தான். வேப்பங் கழிகளையும் வாளையும் இடையில் செருகினான். இறக்கைகளைக் கையில் எடுத்துக் கையுடன் சேர்த்துக் கட்டிக் கொண்டான்.

அன்னத்தின் இறக்கைகள் மாய இறக்கைகளாய் இருந்தன. அவற்றைக் கையில் கட்டியவுடன், வழித்துணைவன் உடல் கண்ணுக்குத் தெரியாத ஆவி உடலாயிற்று. அதனுடன் அவன் பறந்து சென்றான். அரண்மனையை அணுகி, ளவரசியின் பலகணியருகே ஒளிந்திருந்தான்.

அன்று நள்ளிரவிற்குள் இடி இடித்தது.மின்னல் மின்னிற்று. மழை வாரியடித்தது. மலைகளைப் பெயர்த்துவிடுவது போல வெள்ளம் புரண்டோடிற்று. ஆனால் இதற்கிடையே இளவரசியின்