உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

37

பலகணி திறந்தது. அவள் மணப்பெண் போன்ற ஆடை அணிமணி அணிந்து, பலகணி வழியாகப் பறந்து சென்றாள். வழித்துணையும் அவள்பின் பறந்து சென்றான்.

வழித்துணைவேலன் இடுப்பிலிருந்த வேப்பங்கழிகளில் ஒன்றை எடுத்தான். இளவரசி பறக்க வொட்டாமல் அவன் அவளை வலுக்கொண்ட மட்டும் அடித்தான். ஆனால் அவள் மழையையும் இடியையும் பொருட் படுத்தவில்லை. அடிகளைக் கூடச் சட்டைப் பண்ணவில்லை. அடி பொறுக்க மாட்டாமல் உடல்தான் நெளிந்து துடித்தது. அவள் போக்கு மாறவில்லை. அவள் நேரே மலையுச்சிக்குப் பறந்து சென்றாள்.

மலைப்பாறை ஓரிடத்தில் திறந்து வழிவிட்டது. அவள் உட்சென்றதும் அது மூடிக் கொண்டது. ஆனால் வழித்துணை வேலன் அது மூடுமுன் உட்சென்று விட்டான். வழியெல்லாம் அழகிய மலர்ப் பந்தர்போல அணியழகுடையதாயிருந்தது. ஆனால், மலர்கள் உண்மையில் பலநிறச் சிலந்திகளாக இருந்தன. அதன் முடிவில் ஓர் அழகிய அரண்மனை இருந்தது. அது தேரைகளால் கட்டமைந்திருந்தது. அதன் நடுக்கூடத்தில் நீலக் கந்தக ஒளிவீசும் பாம்புப் பற்களால் ஒரு விதானம் அமைந்திருந்தது. மின்மினிகள் விளக்காகவும், எலும்புகள் தூண்களாகவும், எலிகள் இரு தவிசுகளாகவும் அமைந்திருந்தன. இவற்றுள் ஒன்றில் கோர உருவமுடைய ஒரு மாயக்காரன் வீற்றிருந்தான். “ஏன் இவ்வளவு நேரம்?” என்று அவன் இளவரசியை அதட்டினான்.

அவள் பணிந்து மன்றாடினாள். மழையையும் இடியையும் சாக்குக் கூறினாள். சவுக்கடி போல ஆலங்கட்டிகள் ஓயாது விழுந்தன என்றும் குறை தெரிவித்தாள். அவன் ஒருவாறு அமைந்து, தன் மயிரடர்ந்த முரட்டுக் கைகளால் அவன் தலையைக் கோதினான்.

இரவு முழுவதும் பல மாய வேடிக்கைகள் அந்த அரண்மனையில் நடைபெற்றன. மாயாவியும் இளவரசியும் அவற்றைக் கண்டு களித்திருந்தனர். எலும்புக் கூடுகள் வகைவகை யாக ஆடின. விறகுக் கட்டைகள் மீட்டுவார். இல்லாமலே யாழ் போலப் பாடின. பலவகைக் கலங்களும் உண்டிகளும் பரிமாறுவார் இல்லாமலே இளவரசியின் அருகிலும் மாயாவி அருகிலும் வந்தன. ஒரு யாமம் வரை அவர்கள் குடித்துக்