உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

43

உதவினேன். அச்செயலுடன் என் ஆற்றல் தீர்ந்தது. ஆனால் மகிழ்வுடன் நான் இனிச் செல்லும் உலகில் உனக்காக இறைவனை வழிபட்டுக்கொண்டிருப்பேன்.

66

கூனியாக

வந்தது

என் நல்வினையே, மூன்று முரடர்களையும் அது மூன்று வேப்பங்கழிகளாகக் கொண்டு வந்து தந்தது. இளவரசியின் மாயப் பழியகற்ற அவை உதவின. என்னிடம் நீ கொண்ட நட்பும், உயிர்களிடம் காட்டிய அன்புமே அன்னமாய் வந்து தன் இறக்கைகளை அளித்தது. அவற்றின் உதவியால்தான் நான் மீட்டும் ஆவி வடிவில் கண்காணாமல் சென்று, மாயாவியின் மறைவிடத்திலிருந்து மறைமொழிகளை அறிய முடிந்தது. நாடகக் குழுவாக வந்தவர்கள் உன் நல்லெண்ணங்களே. அவர்கள் தந்த வாள் உண்மையில் நீ அருள் உள்ளத்துடன் கிழவனுக்குக் கொடுத்த கடைசிக் காசுதான். அதுவே மாயாவியின் தலையை வெட்ட உதவிற்று.

“உன் நற்செயல்களே உனக்கு உதவின. உன் நல்லுள்ளம் உலகில் நலம் பரப்பி வாழட்டும். உன் மகிழ்ச்சியிடையே என் நட்பை நினைத்துக் கொள்.

“உன் சிலநாள் நண்பன்,பலநாள் துணைவன், வழித்துணை வேலன்”

புதுமையான இக்கடிதத்தை இளஞ்சாத்தன் மீட்டும் மீட்டும் வாசித்தான். அவன் வாழ்வில் அது என்றும் மாறாத ஓர் க்கும் துணையாயிருந்தது.

இளவரசி நாகவல்லியுடன் இளஞ்சாத்தன் இனிது வாழ்ந்து, பலவகை அறச்செயல்களால் மக்களை மகிழ்வித்து நாடாண்டான்.