உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

49

அவர்கள் கிடந்த காடு 'பாலி' நாட்டைச் சார்ந்தது. அந்நாட்டின் படைத் தலைவனின் நாட்டுப்புறமனை அந்த ஆற்றருகிலேயே இருந்தது. அவன் தற்செயலாக இளவேனில் கிடந்த இடத்தின் வழியாகச் செல்ல நேர்ந்தது. அச்சமயம் அவன் துயரமிக்க ஒரு செயலில் வேண்டா வெறுப்புடன் ஈடுபட்டிருந் தான். அவன் இளமனைவி பல குழந்தைகளைப் பெற்றும், பிறந்த குழந்தைகளெல்லாம் சில நாட்களுக்குள்ளாகவே இறந்து போயின. இப்போதும் ஒரு குழந்தை பிறக்கும்போதே இறந்து பிறந்தது. அதைக் கையிலேந்தி ஆற்றருகே அடக்கம் செய்யும் கசப்பான கடமையாற்றலே அவன் அவ்வழியே தனியே வந்தான்.

இளவேனில் கிடந்த இடம் முதலில் அவன் கவனத்தைக் கவர்ந்தது. ஆனால் அருகே பொன்னின் உயிர்ப் பதுமையாகக் கிடந்த இளங்குழந்தையைக் கண்டதே அவன் அகம் துடித்தது. ஆதரிக்கக் குழந்தை இல்லாத அவன் பார்வை, ஆதரவற்றுக் கிடந்த அக்குழந்தை மீது ஆவலாகப் பாய்ந்தது. ஆவல் அவன் உள்ளத்திலும் புதுக்கருத்துத் தூண்டிற்று, குழந்தை பிறந்ததே யறியாது கிடந்த தாயருகே அவன் தன் உயிரற்ற மதலையைக் கிடத்தினான். உயிர் மகவை ஆர்வத்துடன் அணைத்தெடுத்துச் சென்றான்.

குளிரால் அழமுடியாது விறைத்துக் கிடந்த குழந்தை அவன் அணைப்பிலே அழத் தொடங்கிற்ற!

இறந்த குழந்தையை இடுகாட்டுக்கு அனுப்பி ஏங்கிக் கிடந்த படைத்தலைவன் மனைவி பண்டார வல்லி, அழுங்குழந்தையுடன் கணவன் வருவது கண்டு வியப்பார்வமுற்றாள். இறந்ததாகக் கருதப்பட்ட தம் குழந்தையே ஆற்றோரக் காற்றுப்பட்டு உயிர்த்துடிப்படைந்துவிட்டது. என்று கணவன் பொருத்தமான விளக்கம் தந்தான். பல புதல்வர்களைப் பெற்றிழந்த வயிறு அக்கூற்றால் மிகவும் குளிர்ந்தது. ஏனெனில் அதன்பின் அவள் அடுத்தடுத்து இரு குழந்தைகளுக்குத் தாயானாள். இரண்டும் உடலுரம் பெற்று வளர்ந்து கண்டெடுத்த குழந்தையுடன் போட்டியிட்டு வளர்ந்தன.

இளவேனில் உணர்வு பெற்றெழ உண்மையிலேயே நெடுநேரமாயிற்று. சுரத்தில் தங்கிய பறவைகள் அவள்மீது ஓயாது உதிர்த்த இறகுகளும் எச்சங்களுமே அவளைக்