உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

89

கொண்டனர். பாண்டியர் மட்டுமேயல்லர், சோழரும் சேரரும் கூடத் தம்மை ஆரியருக்கு எதிரானவர்கள் என்றே கருதினர்.

ஆரியருக்கும் தமிழ் மன்னர்களுக்குமிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன என்று கேள்விப்படுகிறோம். அதில் ஆரியர் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாண்டிய அரசர்களில் ஒருவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயருடன் வழங்கப்படுகிறான். இது அவன் ஓர் ஆரியப்படையை முடியடித்ததைக் குறித்துக் காட்டுகிறது. சோழ அரசன் ஒருவன் (தற்காலத் தஞ்சாவூர் அருகிலுள்ள) வல்லம் என்னுமிடத்தில் ஆரியரைப் போரில் தோற்கடித்தான்87. சேர அரசன் செங்குட்டுவன் மகத நாட்டரசர் கர்ணரின் உதவியுடன் கங்கை வடகரையில் ஆரியரை முறியடித்தான்.88

86

ஆரியர் படை வலிமையுடன் தமிழகத்தில் வந்து குடியேற வில்லை யானாலும், பல பார்ப்பனக் குடும்பங்கள் நற்குடி மக்களாக வந்து வாழ்ந்ததாகத் தெரிய வருகிறது. பொதிய மலையைச் சுற்றி அவர்களின் ஒரு பெருந்தொகையினர் குடியேறி வாழ்ந்தனர். இம்மலையில் வேதமுனிவர் அகத்தியர் வாழ்ந்ததாக அவர்கள் கருதினர். அவர்கள் தாய்நில மக்களுடன் தாராளமாகக் கலந்து பழகவில்லை. தனியூர்களிலே (அதாவது கிராமங்களிலோ) அல்லது பெரிய நகரங்களில் தனித் தெருக்களிலோதான் அவர்கள் குடியிருந் தார்கள். பாண்டி நாட்டில் மதுரை, தங்கல்", வயணங்கோடு

89

ஆகிய இடங்களிலும், சேர நாட்டில் வஞ்சி, பொறையூர்1, ஏரகம்2, மங்காடு3 ஆகிய இடங்களிலும், சோழ நாட்டில் காவிரிப் பட்டினம், முள்ளூர், ஆவிநன்குடி5, செங்களம்% ஆகிய ங்களிலும் அவர்கள் பெருந்தொகையினராக வாழ்ந்தார்கள்.

அவர்கள் பல கோத்திரங்கள் அல்லது கால்வழிக் குழுக்களைச் சார்ந்தவர்களெனக் கூறிக் கொண்டார்கள். எல்லாக் கோத்திரங்களுமே தம்மை இரண்டு புகழ் மிக்க முதல்வர்களின் வழி வந்தவர்களாகப் பெருமைப்படுத்திக் கொண்டனர். ஏனெனில் அவ்விரு முதல்வர்களும் உலகைப் படைத்த நான்முகனையே தந்தையாகக் கொண்டவர்கள்7 மிகப் பழைமை வாய்ந்த காப்பியக் குடிப் பார்ப்பனர் சேர மண்டலப் பகுதிகளில் இருந்ததாகச் சிறப்பிக்கப்பட்டனர்.98