உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

87

மரபின் முதல்வர் யார் என்பதுபற்றித் திட்டவட்டமாக எதுவும் தெரிய வரவில்லை. தென் இந்தியாவில் வழங்கும் மகாபாரதக் கதையின் படி, அருச்சுனன் பாண்டிய அரசன் மலயத்துவசனின் புதல்வி சித்திராங்கதையை மணந்தான் என்று தெரிய வருகிறது. ஆனால் வட இந்தியாவில் வழங்கும் மகாபாரதப் படிகளில் இவ் வரலாறு தரும் பகுதி காணப்படவில்லை. ஆகவே இது ஓர் டைச் செருகல் என்பதில் ஐயமில்லை.73

தென்பாண்டி நாட்டைத் தோற்றுவித்த முதல்வர் ஓர் அரசியே என்பதை நிலைநாட்ட எப்படியும் தனிப்பட்ட வேறுசான்றுகள் உண்டு. பாடலிபுத்திர நகரில் சந்திரகுப்தனின் அவையில் செலியூக் கஸின் தூதுவராக இருந்த மெகாஸ்தெனிஸ் பாண்டிய மரபின் பிறப்புப்பற்றிக் கீழ்வருமாறு கூறுகிறார்:-

“ஹெராக்ளிஸ்74 இந்தியாவுக்கு வந்து இங்கே ஒரு புதல்வியைப் பெற்றான். அவளுக்கு 'பாண்டியா’75 என்று பெயரிட்டான். இந்தியாவில் தென் திசையில் கடல்வரை கிடந்த பகுதியை அவளுக்குத் தந்து, அவள் ஆட்சியின் கீழ் உள்ள நாட்டையும் 365 ஊர்களாக வகுத்தான். அவளுக்குரிய அரசிறையை ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு நாள் அவள் தலைமைக் கருவூலகத்துக் கொண்டுசெலுத்த வேண்டுமென்றும் கட்டளை அமைத்தான். இவ்வரிய முறையால், என்றேனும் வரிமுறைமையில் தவறுபவர்களைக் கடிந்து ஒறுப்பதில் அரசிக்குத் திறை செலுத்தியவர், செலுத்தவேண்டியவர் ஆகியோர் துணையும் கூட்டு வலுவும் எப்போதும் இருக்க வழி கோலப்பட்டது.

9976

பிளினி கூறும் செய்தியும் இதனுடன் ஒத்ததே; அவர் கூறுவது வருமாறு:

  • 77

"அடுத்தபடியாகக் குறிக்கத் தக்கவர்கள் பாண்டேக்கள்., இந்தியாவில் பெண்களால் ஆளப்பட்ட இனம் இது ஒன்றே நம் கேள்வியின்படி, ஹெர்க்குலிஸுக்கு8 ஒரே மகள் இருந்தாள் ஒரே மகளாயிருந்த காரணத்தால் தந்தை அவள்மீதே தன் அன்பை எல்லாம் சொரிந்தான். அவளுக்கு அவன் ஒரு வீறுமிக்க ஆட்சிப் பகுதியையும் அளித்தான். அவள் மரபினர் இன்று 300 நகரங்களின் மீது ஆட்சி செலுத்துகிறார்கள்.அவர்கள் படையில்