உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம் - 26

அமைந்துள்ளது. அதில் கையோப்பமிட்ட சோழ அரசரின் உயர்பணி முதல்வரிடையே கீழ் வரும் நாகர்களின் பெயர்கள்

டம்பெற்றுள்ளன:-

ஒளிநாகன் மாடையன் அழகியசோழ அமர்நாட்டு மூவேந்த வேளான்;

ஒளிநாகன் சந்திரசேகரன்;

ஒளிநாகன் நாராயணன்;

இந்துபுரவான் சங்கநாகன்;

உச்சன்கிழவன் முகுளிநாகன்.

இப்பதிகத்திலிருந்து ஒளிநாகரல்லாமலும், நாகரினத் திலேயே சங்கநாகர், முகுளிநாகர் ஆகிய பிரிவினர் 11-ஆம் நூற்றாண்டில் இருந்தனர் என்று தெரியவருகிறது.

அருவாளர் என்பவர்கள் அருவாநாடு, அருவாவடதலை கிய பகுதிகளில் வாழ்ந்த நாகரின் இடச்சார்பான பெயர். கி.பி. ரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சோழர் வலிமையும் னைத் தமிழரசர் வலிமையும் தற்காலிகமாகச் சிலகாலம் தளர்வுற்றிருந்தது. அச்சமயம் அருவாளர் மரபினரின் கிளையினரான ஓவியர் எயிற் பட்டினத்தில் ஆண்டதுடன் மாவிலங்கையின் மன்னர்களாகவும் விளங்கினர். தமிழ்க்கவிஞருள் ஒருவர் அவர்களைப் 'பெருந்தன்மையும், துணிச்சலும் உடையவர்க’ளென்றும், 'போரில் புலியேறு போன்ற கொடுந்திறலாளர்' என்றும் குறித்துள்ளார்.20

மேலங்கேயின் அரசர் என்று டாலமியால் குறிப்பிடப்பட்ட பஸர்நாகர் பெரும்பாலும் இந்த ஓவியராகவே இருக்க வேண்டும்.21 டாலமி கூற்றிலிருந்து சோழர் தலைநகராகிய உறையூரிலும், சோழர் குடிக்கும் நாகர் குடிக்கும் ஏற்பட்ட இனக்கலப்பின் மரபில்வந்த சோரநாகரே சோழர்களை அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியிருக்க வேண்டும்மென்று கருத இடமேற்படுகிறது.22 இதேகாலத்தில் இலங்கையிலும் நாகர்கள் ஆட்சியுரிமையைக் கைப்பற்றியிருந்தனர் என்று கருதவேண்டி யிருக்கிறது. மகாவம்சோவினால் தரப்பட்ட கீழ்வரும் இலங்கை அரசர் பெயர்கள் இதைக் காட்டுகின்றன.23