உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. தமிழ்க் கிளைஇனங்களும், கிளைகளும்

தமிழகத்தில் வாழ்ந்த மிகப் பழைய குடியினர் வில்லவர். மீனவர் என்பவர்களே. வில்லவர் அல்லது வில்லாளிகள் மலைப் பகுதிகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வேட்டையால் வாழ்க்கை நடத்தினார்கள் (திராவிடச்சொல் வில் என்பதன் பொருள் விற்படை). மீனவர் அல்லது செம்படவர் ஆற்றுத்தீரங்கள், தாழ்வெளிகள், கடற்கரை ஆகிய பகுதிகளில் வாழ்ந்தார்கள் (திராவிடச் சொல் மீன் என்பது மீனினத்தைக் குறிக்கும்). அவர்கள் மீன்பிடித்து வாழ்க்கை நடாத்தினார்கள். இவ்விரு கிளையினத்தவர்களும் இந்தியா முழுவதும் பரவியிருந்த ஒரு முற்பட்ட கால மனித இனத்தவர் என்பது தெளிவு. ஏனெனில் அவர்கள் இன்னும் இராஜபுதனத்திலும், கூர்ச்சரத்திலும் தங்கியுள்ளார்கள். அங்கே அவர்கள் பீலர்கள் என்றும் மீனர்களென்றும், கன்னட நாட்டில் பில்லவர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

அரைநாகரிகமுடைய

க்கிளையினங்களை மக்கட் பெருக்கமும் நாகரிக வளர்ச்சியுமுடைய நாகர் என்ற வகுப்பினர் வென்றார்கள். இவர்கள் ஒருகாலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும் பகுதியையும் ஆண்டார்கள். அவர்கள் இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளார்கள். பெரிதும் தெக்கணத்திலேயே இருந்திருக்கக்கூடிய ஒரு நாகர் தலைநகரம் இராமாயணத்தில் கீழ் வருமாறு வருணிக்கப்பட்டுள்ளது.

“நஞ்சுறை வன்பற்கள்கொடு நாகரிள மைந்தர்

பொன்செய் கொடுந்தாழ் இரும்புரிசை மதில்காக்க

எஞ்சுதலில் வீதிபல எங்கணும் நிறைந்து

மிஞ்சவரு போகவதி மேவு நகரத்தே”