உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அப்பாத்துரையம் - 33

நம்பிக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று.

"நான் ஓர் ஆண்டு முழுவதும் உங்கள் வயல்களுக்கு கூலியில்லாமல் தண்ணீர் இறைக்கிறேன். இந்த மானை விட்டு விடுங்கள்” என்றான்.

ஊரார் மானை விட்டுவிட்டனர்.

மான், நன்றியுடன் நம்பியைப் பார்த்தது. "நான் இனி உனக்கு அத்தை மகள் தான். உனக்கு வேண்டும்போது அந்தப் பறவையை என்னிடம் அனுப்பு” என்றது.

நம்பி, அதுமுதல் பொறுமையாக எல்லாருக்கும் ஓர் ஆண்டு வேலை செய்தான்.

நம்பிக்கு மாமன் மகள் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் நாகு நம்பி அவளை மணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.அவளை நம்பிக்குக் கொடுக்க மாமனுக்கு விருப்பம் ல்லை. நம்பி தன் வீட்டுப் பக்கம் வராமல் தடுக்க வழி தேடினான்.

"அரசி குளிக்கும் மஞ்சளை எடுத்து வந்து கொடு; அதன் பிறகு நாகுவை நீ மணந்து கொள்ளலாம்” என்றான் நம்பியின்

மாமன்.

“நம்பி இந்தக் காரியத்தைச் செய்தால், அவனைக் காவலர் பிடித்துக் கொள்வார்கள். அவன் திரும்பி வர மாட்டான்” என்று மாமன் நினைத்தான்.

நம்பி என்ன செய்வது என்று சிந்தித்தான்.

பறவை அப்போது அவனைவிட்டுப் பறந்து சென்றது. சிறிது நேரத்தில் அது மஞ்சளுடன் அவன் முன் வந்தது.

66

'அது அரசி குளிக்குமிடம் சென்று மஞ்சளைக் கொண்டு வந்திருக்கிறது" என்பதை அவன் அறிந்தான். நன்றியுடன் பறவையைக் கையிலெடுத்து அதைத் தடவிக் கொடுத்தான்.

"நாகுவின் மிஞ்சி கிணற்றில் விழுந்து விட்டது. அதை இன்று மாலைக்குள் எடுத்துக் கொடுத்தால், நீ நாகுவை அடையலாம்” என்றான்.

நம்பி மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.