உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

65

டெராகோனாவில்34 தங்கியிருக்கும் சமயம் அவனைச்சென்று கண்டது. மற்றது ஆறு ஆண்டுகளுக்குப்பின் (கி.மு.20-இல்) அவர் சாமாஸ்35 தீவிலிருக்கும்போது அவரைச் சந்தித்தது.

உரோமப் படைவீரர்கள் பாண்டிய அரசர் பணியிலும் மற்றத் தமிழரசர் பணியிலும் அமர்ந்திருந்தார்கள். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சியில் மதுரைக் கோட்டைவாயில் காப்பாளராக உரோமப் படைவீரர்கள் அமர்வுபெற்றிருந்தனர்36

இக்காலப் புலவர் ஒருவர் ஒரு தமிழரசன் போர்க் களத்தி லுள்ள படைவீட்டைப்பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

"படைவீட்டின் மதில்கள் இரும்புச் சங்கிலிகளால் இறுகப் பிணிக்கப்பட்ட ஈரடுக்கான பாய்த்துணிகளால் அமைக்கப் பெற்றிருந்தன. அதனைக் காவல்காத்து நின்ற வலிமை வாய்ந்த யவனரின் கடுநோக்குக் காண்பவருக்கு அச்சந்தருவதாயிருந்தது. இந்த யவனவீரரின் நீண்ட தளர் சட்டைகள் இடுப்புடன் அரைக்கச் சைகளால் இறுகக் கட்டப்பட்டிருந்தன. சைகைகளால் மட்டுமே கருத்தறிவிக்கவல்ல ஊமர்களான சில மிலேச்சர்கள் வெளிக் கூடத்தில் இரவு முழுழம் காவல் காத்தனர். அழகிய விளக்கால் ஒளிதரப்பெற்ற உட்கூடங்களைச்சுற்றி அவர்கள் ஓயாது திரிந்த வண்ணம் இருந்தனர்.37

இவ்வருணணையிலிருந்து, பண்டைத் தமிழரசர்களால் யவனரும் மற்ற மிலேச்சர் அல்லது வெளிநாட்டாரும் மெய்க் காவலர்களாக அமர்த்தப்பட்டிருந்தனர் என்பதை உணர்கிறோம்.

அன்னத்தின் உருவைத் தலைப்பில்கொண்ட யவனப் பூங்குடில்கள்,38 விளக்குகள்,3” நிற்கும் பெண்சிலை யுருவம் இரு கைகளாலும் நெய், திரியிடும் குடுவையை ஏந்துவதாக அமைந்த அகல் விளக்குகள் ஆகியவை தமிழகத்தில் அன்று பொது வழக்காய் இருந்தன.40

கீழ்கடற்கரையில் ஒரு பெரிய வாணிகக்களமாயமைந்திருந்த காவிரிப்பட்டணத்தில் யவனவணிகர் குடியிருப்பொன்று

இருந்தது."

தமிழகத்துடனும் இந்தியாவின் மற்றப் பகுதிகளுடனும் உள்ள உரோமக வாணிகத்தின் அளவு மிகப் பெரியதாகவே இருந்தது என்று பிளினியின் கூற்றால் அறிகிறோம். உரோமப்