உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 233

கண்முன் வந்து நின்றாள். அதேசமயம் அவள் அழகும் இளமைப் பொலிவும் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

“பெண்மணி, நீ இந்த இடத்துக்குப் புதியவளென்று நினைக்கிறேன். நீ யார்?” என்றான் அவன்.

“ஒருவகையில் நான் புதியவள் தான். நான் கியானோவின் மகள் கோக்குவா. ‘ஒகு’வுக்குப் படிக்கச் சென்றிருந்து, இரண்டு நாட்களுக்கு முன்தான் திரும்பி வந்தேன். நீங்கள் யாரோ?” என்றாள்.

கீவ் தான் யார் என்று அறிவிப்பதில் சற்றே தயங்கி, அதன்பின் துணிந்து தன் மாறுபெயரைக் கூறினான். அவன் தயக்கத்தைக் கவனித்தும் கவனியாதவள்போல் இருந்தாள்.

“உனக்குத் திருமணமாயிருக்கிறதா என்பதை நான் அறியலாமா?” என்றாள்.

“எனக்கும் ஆகவில்லை. இதுவரை அதைப்பற்றி நான் எண்ணியதுமில்லை. ஆனால், உன்னைப் பார்த்தவுடன்..” என்று கூறித் தயங்கினான் கீவ். அவள், அவன் கூறியதை முழுதும் கேட்டுக் கொண்டு நிற்கவில்லை. வீட்டை நோக்கி ஓடி மறைந்தாள். அன்றே கீவ், கியானோவிடம் சென்று, “உன் மகளை எனக்குத் தரமுடியுமா?” என்று கேட்டான்.

கியானோ, கீவை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. கீவை மணம் செய்து அவன் கலை மாளிகையில் வாழத் தன் மகள் விரும்பி இருந்ததை அவன் அறிவான். ஆகவே, அவன் மறுக்க இருந்தான். இச்சமயம் கோக்குவா கீவின் பின்புறம் நின்று சைகை காட்டினாள். அதன் பொருள் என்ன என்பதை அறியாமலே, கியானோ, “மகள் விருப்பம் அதுவாக இருந்தால், தடையில்லை,” என்றான்.

கோக்குவா, கீவின் தயக்கத்திலிருந்து அவன் உண்மையில் சமூகத்தில் தன் குறைந்த படிமையை மறைக்கப் பார்ப்பதாகவே எண்ணியிருந்தாள். அதனால் அவன் கேட்கும்படி அவன் ஏழ்மை பற்றியும் குறைந்த படிமை பற்றியும் நையாண்டி பேசினாள். அப்போது அவன் முகம் அடைந்த மாற்றத்தை அவள் உன்னிப்பாகப் பார்த்தாள். அவன் மறைப்பது குறைந்த