உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

31

புத்தம் புதிய ஓர் உண்மையை இவை எனக்கு எடுத்துரைத்தன. டாலமி காலத்தில் கடற்கரையின் போக்கு இன்றைய காயலின் கீழ்கரையாகவே இருந்திருக்கவேண்டும் என்று நான் கருதினேன். எனவே இன்று சங்கனாசேரியிலிருந்து பள்ளிப் புறம்வரை நீண்டுகிடக்கும் காயலோ, அதன் மேல்கரையாக அமைந்துகிடக்கிற நீண்ட கழிநிலமோ அந்நாளில் இருந்ததில்லை என்று கண்டேன். தற்போது வளம் பொங்கும் துறைமுகங்களாயுள்ள கொச்சி, ஆலப்புழை ஆகியவை இக்கழி நிலத்திலேயே அமைந்திருப்பதனால், வையும் அன்று தோன்றியிருக்கவில்லை.

நெல்குண்டா என்னுமிடத்திலிருந்து மிளகு படகுகளில் பக்கரைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். இந்த நெல்குண்டா நிற்குன்றமே என்று தோன்றுகிறது. இப்பெயரின் பல்வேறுபட்ட திரிபுள்ள வடிவங்களுடன் அது பல ஆசிரியர்களால் குறிக்கப்படுகின்றது. பிளினி அதை நியாகினிட்62 என்று கொள்கிறார். செங்கடற் பயணத்தில் அது நெல்குண்டா என்றும், டாலமியால் மெல்குண்டா என்றும் கொள்ளப்படுகிறது. பியூட்டிங்கெரியன் பட்டயத்தில்63 அது நின்கில்டா4 என்றும் ராவென்னா என்ற நிலநூலாசிரியர் வழக்காற்றில் நில்கின்னா" என்றும் வழங்கப் பெறுகிறது. இந் நகரின் இட அமைப்பு கோட்டயத்திலிருந்து ஆறு கல் கிழக்காகவும், இன்றுவரை மிகச்சிறந்த மிளகு விளையும் மீனச்சிலின் அருகாமையாகவும் அமைந்திருந்தது.

67

-65

பக்கரைக்குத் தெற்கேயுள்ளதாக டாலமி அயாய் நாட்டைக் குறிப்பிடுகிறார். இதுவே புலவர்களை ஆதரித்த பேர்போன வள்ளலாகிய பொதிகை மலை ஆயின் குடியினர் ஆண்ட பகுதி ஆகும். இதிலுள்ள நகர்களாகிய எலங்கோன், கோட்டியாரா, பம்மலா ஆகியவற்றைத் தற்கால விளவங்கோடு, கோட்டாறு பொன்னணை ஆகியவற்றில் காணலாம். ஆகவே பக்கரைக்குத் தெற்கிலும் கடற்கரை டாலமி காலத்துக்குப்பின் ஆறு அல்லது ஏழு கல்தொலைபின்னிடைந்திருக்கிறது என்று காணலாம். டாலமி குறிப்பிட்ட உள்நாட்டு நகர்களில் கீழ்வருபவற்றைக் கீழ்க்கண்டபடி அடையாளங் காணலாம் என்று நான் கருதுகிறேன்.