உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

73

ளிடையே ஒரு பூங்கொடியாகத் தனித்துலவிய ஓர் அழகிய நங்கையைக் கண்டான். அவள் யாராயிருப்பாளோ என்ற வியப்பார்வத்துடன் மன்னன் சிறிது நேரம் தன்னை மறந்திருந்தான். அச்சமயம் வெற்றிகரமான வில் ஏந்திய காதலங் கடவுள் தன் மலர்க் கணைகளை மன்னன் நெஞ்சத்தினுள் ஆழக் குறிபார்த்துச் செலுத்தினான்.அவள் மேனியின் எழில் மன்னனைத் தன்வயப்படுத்திற்று. அவள் இசையினும் இனிய குரலில் அவன் செவிகள் தன்னிலையழிந்தன. மறவர் பெரும் படைகளை நடத்திச்சென்ற அவன் அப்போது அக்காதல் நங்கையின் மீளா அடிமையானான்.

66

“அந்தச் சோலையின் கண்ணே அவளுடன் குறை விலா நிறை இன்பம் நுகர்ந்து அவன் ஒரு மாதகாலம் கழித்தான். ஆனால் ஒருமாத முடிவில் அவள் முதலில் தோன்றியபடியே திடுமென மறைந்தாள்."

மாற்றரசர் பலர் முடிகளை மண்ணில் மடியச்செய்த அம்மன்னவன் அவளை மீண்டும் சந்திக்கும் ஒரே எண்ணத் துடன் சுற்றியலைந்தான். பாதலவழியிலும், சேண்வழியிலும், கடலகத்தும் ஒருங்கே தங்குதடையின்றிச் செல்லத்தக்கபெரியார் ஒருவரை அவன் கண்ணூற்றான். அவருக்கு அவன் வணக்க வழிபாடாற்றினான். உயிருக்கு உயிராய்விட்ட அந்த நங்கை மறைந்துசென்ற இடத்தைத் தனக்கு அறிவிக்குமாறு வேண்டினான்.

மன்னனே! நான் அவளைப் பார்த்தது கிடையாது. ஆயினும் அவளைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவள் செய்திகள் யாவும் அறிவேன்; ஆகவே, இதைக் கவனித்துக் கேள். அரசே! போரில் இடைவிடா வெற்றி காணூம் மன்னன் ஒருவன் நாக நாட்டில் ஆள்கிறான். வளைவணன் என்பது அவன் பெயர். அவன் மனைவி வாசமயிலை என்பாள். அவர்கள் பெற்ற அருமகவே இவ்விளநங்கை பீலிவளை. அவள் பிறந்தபோது ஒர் அறிவர் அவள் வருங்காலம் அறிந்து கூறினார். கதிரவன் குலத்து மன்னனொருவன் அவளை மணப்பானென்று அவர் உணர்ந்து தெரிவித்தார்.”

"இனி, அவள் புதல்வன் தான் உன்னைக் காண வருவான். நீ அவனை இனி காண முடியாது," என்றார் பெரியவர்.