உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 15.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

❖ 15❖ மறைமலையம் - 15

அற்புத வைராக்கிய சுத்தசிவஞான சிரேட்டராகிய பட்டினத்தடிகள் திருவாய் மலர்ந்தருளிய திருவாக்கான் இனிது விளங்கும். இத்தன் மையதான அசேதன செல்வம் போலாது, ஆன்மாவின் ஞான மென்னுங் களஞ்சிய அறை யிலே வைத்துப் பாதுகாக்கப்படுவதாய், அழியுந் தன்மைத் தான சரீரத்தை மாத்திரம் போஷிப்பதற்கு அனுகூலமான அசேதன திரவியம் போலாது ஆன்மாவின் சிற்சக்தியான சரீரத்தைப் போஷிப்பதற்கு மிக இயைந்த திரவியமான சமய உணர்ச்சியானது அநாகரிக சாதியார் முதல் நாகரிக விருத்தியுடையார் ஈறாக எல்லார்க்கும் பொதுமையாய் நிகழக் காண்கின்றோம்.

இனி இந்தச் சமயம் என்னுஞ் சொல்லால் பொழுது, அல்லது காலம், அல்லது அவசரம் என்னும் பொருள் பெறப் படுகின்றது.பஞ்சேந்திரிய உணர்வுகளும் ஒருகாலத்து ஒருங்கு சேர்ந்து ஐந்து விடயங்களையும் ஒன்றாய் அனுபவியா மையால், அவ்விந்திரியங்கள் ஒவ்வொன்றன் வழியாயும் தனித்தனியே பிரவேசித்து அவ்வவற்றை விடயிக்கின்ற ஆன்மாவானது அவ்வவற்றை அங்ஙனம் தனித் தனியே விடயிக்கும் அவசரம் உண்ட ண்டாகின்றது. இவ்வாறு காலத்தினால் வரையறுக்கப்படுதல் ஏகதேச வியாபகமுடைய சீவான் மாவுக் கன்றிச் சருவ வியாபகமுடைய பரமான்மாவுக்கு இல்லையாம். சலன முடைய பொருள்களுக்கே காலமும், இடமும் உண்டாம். ஏகதேசப் பட்ட வியாபகமுடைய சாத்தான் என்பான் கங்கைக் கரையிலிருந்தான் என்றவழி இறந்தகாலமும். காவிரிக்கரையி லிருக்கின்றான் என்னும் வழி நிகழ்காலமும், கன்னித் துறை யிலிருப்பான் என்புழி எதிர்காலமும் கங்கை, காவிரி, கன்னி என்னும் இடங்களும் பெறப்படுகின்றன. இங்ஙனங் காலவேறு பாடுகளும் இ வேறுபாடுகளும் ஏகதேசவியாபகமும் சலன முடைய சீவான்மாக்களுக்கே உள்ளனவாதல் தெற்றென விளங்கும். இனி அச் சாத்தன் என்பான் அவ்வாறு ஏகதேசப் படுதலும் சலித்தலும் இல்லாது எங்கும் உள்ள அறிவுப் பொருள் என்று சிந்திக்கக் கூடுமாயின், கங்கை, காவிரி, கன்னி முதலான எல்லா இடங்களிலும் சலனமின்றி ஏககாலத் துள்ள அவனுக்கு அங்ஙனங் காலவேறுபாடும் இடவேறு பாடும் ஒருவாற்றா னும் சொல்லல் ஏலாதென்க. நேற்றும் இன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/39&oldid=1583091" இலிருந்து மீள்விக்கப்பட்டது