உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 15.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

❖ - 15❖ மறைமலையம் – 15

ஏனை

து

அன்பர்களே! இங்ஙனம் கந்தழி, பிரமம் என்னும் பதங்களாற் பிரதிபாதிக்கப்பட்ட சிவம் என்னும் தத்துவங் கடந்த பரம் பொருளை விசாரித்த அவசரமே சைவ சமயம் என்று உணரற்பாற்று. அற்றேல் அப்பரம்பொருளை யாதானு மொரு பெயரால் வழங்கியிடாமற் சிவம் என்னும் சிறப்புப் பெயரால் வழங்குவித்தல் என்னையெனின்;--வேதாகம உபநிடத ஷடதரிசன புராணேதிகாசமாகிய சருவமும் சிவ என்னும் இரண்டெழுத்திலே அடங்குகின்றன. யாங்ஙன மெனின், இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் வேதம் நான்கில் அதர்வணம் என்பது முதன் மூன்றின் மந்திரத் தொகுப்பே யாதலால் அஃதவற்றில் அந்தர்ப்பாவமுறும். ஆகலினாற் றான் அமரநிகண்டுடையார் அம்மூன்றனையுஞ் சுட்டி வேதங்கள் ‘த்ரயீ' என வழங்கப் படுமென்றனர். அம்மூன்று வேதங்களுள் நடுநின்ற எசுர் என்றமையால், యజు రేవశిర : யிரண்டிற்கும் சிரத்தானமாய் நிற்குஞ் சிறப்பு வாய்ந்ததாம். மாந்திர மெனவும் பிராமணம் எனவும் இருவேறு பகுதியின தாய் விளங்கா நிற்கின்றது. இவற்றுள் மாந்திரப் பகுதி மறித்தும் ஏழுகண்டங்களாகப் பகுக்கப் பட்டுச் சம்மிதா காண்டம் என்னும் பெயருடைத் தாய்ச் சிறந்து விளங்கு வதாம். இனி யிச்சம்மிதாகாண்டம் ஏழினுள்ளும் நடுக் காண்டமே பெரிதுஞ் சிறப்புடைத்து. இனியிந்நடுக் காண்டமும் ஏழு சங்கிதைகளாக வகுக்கப் பட்டுள்ளது. இவற்றுள்ளும் நடுநின்ற சங்கிதையுள் திருவுருத் திரத்தின் கண்ணே சதருத்ரீயம் விளங்காநிற்ப, அச்சத ருத்ரீயத்தின் இடையிலே விளங்கும் ‘நமசிவாய' என்னும் பஞ்சாக்கர மத்தியிற் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ‘சிவ’ என்னும் பதத்தால் வேதமும் வேதத்தைச் சார்ந்த கலைகளும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. ஆகையால், சி ெ னன்னும் பதம் பிரமமென்னும் பதத்தாற் குறிக்கப்படும் பரம் பொருட்குச் சிறப்புப் பெயராம் என்று தெளியப்படும். இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமாதலால் இத் துணையின் அமைந்து, எடுத்த விஷயத்தின் மேற்றொடர்ந்து செல்வாம்.

ம்

ச்

வ்வாறு சைவம் என்னும் தத்துவ விசார அவசரம் தத்துவாதீதமான பரம்பொருட் சிவ சொரூபத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/51&oldid=1583103" இலிருந்து மீள்விக்கப்பட்டது