உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 15.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

7

நாளையும் கங்கை, காவிரி, கன்னி என்னுஞ் சருவதானங் களினும் ஒருங்கு வசிப்பானை நோக்கி இவன் கங்கைக் கரையிலிருந்தான், காவிரிக் கரையிலிருக்கின்றான், கன்னித் துறையிலிருப்பான் உண்மைக்கு மாறாய் எல்லாரானும் நகையாடற் பாலதாய் முடியும். எவ்வாறெனின், சருவ வியாபகமாயுள்ள ஆகாயத்தை நோக்கி இது கங்கைக் கரையிலிருந்தது எனவும், இது காவிரிக்கரையிலிருக்கின்ற தெனவும், இது கன்னித்துறையி லிருக்குமெனவுங் கூறுவார் உலகில் இல்லையன்றே! அதுபோலச் சருவவியாபியாய் எங்கும் நிறைந்திருக்கின்ற எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குக் காலமும் இடமும் இல்லை; அவன் காலத்திற்கும் இடத்திற்கும் அதீதமாவன்; அவன் அவற்றின் உள்ளே மாத்திரம் இருப்பான் அல்லன்; அவற்றின் உள்ளும் புறம்பும் அவற்றின் மேலும் வியாபிப்பன் என்றறிக. இது பற்றியன்றே சிவஞானச் செல்வ து ஸ்ரீதாயுமான சுவாமிகள்

என்று வழங்குவேமாயின் அஃது

ரான

அங்கிங் கேனாதபடி யெங்கும் ப்ரகாசமாய்” என்று திருவாய் மலர்ந்தருளியதூஉ மென்க. சகலாகம பண்டித மெய் கண்ட சந்தான துவிதீய ஆசாரிய சுவாமி களான அருணந்தி யடிகளும்,

66

'உலகினை யிறந்து நின்றதரனுரு வென்பதோரார்

உலகவ னுருவிற்றோன்றி யொடுங்கிடு மென்றுமோரார் உலகினுக் குயிருமாகி யுலகுமாய் நின்றதோரார்

உலகினுள் ஒருவனென்ப ருருவினையுணரா ரெல்லாம்”

என்று கட்டளையிட்டருளியது. ஈசாவாசியோபநிடதச் சுருதியும் அசைவில்லதாய் ஏகமாய் மனோவேகத்தினும் மிக்குச் செல்வதாகிய பிரமான்மா அநாதிதொட்டே இந்திரியங்களின் உட்பொருளா யிருத்தலால் அதனை யிந்திரியங்கள் அணைந் தறியமாட்டா, மற்றை அந்தக் கரணங்களுள்ளும் அஃதுள் ளுறையாயிருத்தலால் அவையும் அதனை அணுக மாட்டா, ஆகலின் அப்பரம் பொருட் சொரூபத்தினின்று தோன்றும் பரிசுத்த வாயுவே ஏனை எல்லாவற்றினையுஞ் சேட்டைப் படுத்துகின்றது என்று sadso என்னும் வாக்கியத்தாற் கூறுகின்றது. ஆகவே ஏகதேச இலக்கணந் தீண்டப்பெறாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/40&oldid=1583092" இலிருந்து மீள்விக்கப்பட்டது