உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 15.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

திருச்சிற்றம்பலம்

முதல் உபந்நியாசம்

சைவ உபய தீபங்கள்

சைவமென்பது யாது? அச்சைவத்தினைப் பிரகாசப் படுத்திய உபயதீபங்கள் அல்லது இரண்டு விளக்கங்கள் யாவை? என்று விசாரணை செய்யப் பிரவேசிக்கின்றமை யால் இன்று உபந்நியசிக்க எடுத்துக்கொண்ட அரும்பெரும் விஷயத் திற்குச் சைவ உபய தீபங்கள்' என்னும் பெயர் புனைந்து கொள்ளப் பட்டது. இந்த நிலவுலகத்திலே பிறந்து இருந்து இறந்து போகின்ற சீவர்களுக்குள்ளே சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து உணர்ச்சிகள் மாத்திரம் வாய்க்கப் பெற்று, இவ்வைந்துணர்வு களினும் மேம்பட்டு இவை இவை தம்மை யெல்லாம் நல்லது தீயது என்று பகுத்தறியும் விவேகம் பொருந்தப்பெறாத மிருகராசி களை யொழித்து மிக அரிதிலே கிடைக்கப்பட்ட மக்கட் பிறவியினையுடைய சீவர்களுக் கெல்லாம் இவ்விவேகவுணர்வால் இந்தவுலகத்திற் பெறப் படாத ஓரரும்பெருந்தனம் கைவசத்திலே இருக்கக் காண்கின்றேம். இந்த அசேதன வுலகத்தில் அசேதன முயற்சியால் தொகுத்துக் கொள்ளப்படுகின்ற பெருங் குவியலான பெரும் பொரு ளெல்லாம் எம்முடைய இவ்வசேதன சரீரம் இவ்வசேதன வுலகத்தில் நடைபெறுங் காறும் ஒரு சிலர்க்கு மாத்திரம் ஒவ்வொரு வகையாற் பயன்பட்டு அழிவெய்தி மறுமையிற் செல்லும் சைதன்னிய ரூபியான எமக்குச் சிறிதும் பயன்படுவ தில்லை. இது

“தெய்வச் சிதம்பரத்தேவா வுன்சித்தந் திரும்பிவிட்டாற்

பொய்வைத்த சொப்பனமா மன்னர் வாழ்வும் புவியுமெங்கே மெய்வைத்த செல்வமெங்கே மண்டலீகர்தம் மேடையெங்கே கைவைத்த நாடகசாலை யெங்கே யிதுகண்மயக்கே.” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/38&oldid=1583090" இலிருந்து மீள்விக்கப்பட்டது