உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அப்பாத்துரையம் - 32

வாளை அவள் உருவினாள். திருகுவளையின் காலடியில் வைத்தாள். அவள் இன்னதுதான் செய்கிறாள் என்று யாரும் காணுமுன், அவள் கப்பலிலிருந்து கடலில் குதித்தாள்.

உடல்

இளவரசன் திடுக்கிட்டான். அவன் கைமாலை நழுவி திருகுவளை கழுத்தில் விழுந்தது. அந்தக் கணமே வேல்விழியின் ஒரு சிறு, திவலை நீர் நுரையாயிற்று அவள் வேல்விழியாகக் கடலில் விழவில்லை. நீர்த் திவலையாகவே விழுந்தாள். இளவரசன் இதை நோக்கினான். அவன் உள்ளம்

ரு கணத்தில் உண்மையின் அடிப்படையை ஊகித்தது. அவனும் மற்றெல்லா வற்றையும் மறந்து அந்த நீர்த் திவலையைப் பிடிக்கத் தாவிக் குதித்தான்.

திருகுவளை

உள்ளமும் ஒரு நொடியில் யாவும் உய்த்துணர்ந்தது. அவளும் நீர்த்திவலையைப் பின்பற்றி மணமாலையுடன் கடலில் குதித்தாள். மணமாலை அலைகளின் கழுத்தில் மாலையாக விழுந்தது. ஆக மூன்று நீர்த்திவலைகளின் மீதிட்ட மாலையாய் அமைந்தது.

கடல் மைந்தர், கடல் மங்கையர் அனைவரும் அக்கணமே நீர்த்திவலைகளாகி, அந்த மூன்று நீர்த்திவலைகளாகி, அந்த மூன்று நீர்த் திவலைகளையும் சுற்றி ஆரவாரித்தனர். கடல் அலைகள் தம் ஆட்டபாட்டம் முற்றும் அடங்கி அவர்களை வரவேற்றுப் பெருமைப்படுத்துபவைபோல் அமைந்து குழைவுற்றன. பாண்டிய நாட்டுக் கடற்படையினர் தம் வீரத் தலைவனான இளவரசன் முடிவு கண்டு கலங்கினர். ஆனால் உண்மை மெல்ல அவர்களுக்கும் விளங்கிற்று. இருகடல் நங்கையர்களின் உருவுடன் அவன் உருவும் சமைத்து, அவர்கள் மூவருக்கும் ஒரே மணமாலையிட்டனர். அவ்வுருவங்களைத் தூதுவத் தீவின் கரையிலே எழுப்பிப் பூசித்தார்கள்.

கடலின் நுரைகள் மாலைதோறும் அந்த மூவுருவங் களையும் சுற்றிவந்து முழங்கின.