உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100 ||_

அப்பாத்துரையம் - 46

ஆகிய இவர்களனைவரும் உண்மையில் நிதித் துறையாளர்களே. அவர்களுக்கு உரிய துறை தொழில் துறையன்றா யினும் அவர்கள் இன்று தொழிலுக்கு உடைமையாளர்களாயுள்ளனர். தொழில் முன்னேறுகிறதா, தேக்கநிலை யடைகிறதா என்பதைப்பற்றிய அக்கறையற்று ஆதாயமொன்றிலேயே அவர்கள் குறியாயுள்ளனர். உலகெங்குமுள்ள நிதித்துறையாளர்களைப் போலவே அவர்கள் பண ஆசையுடையவர்களாகவும் தெளிந்த தொலைநோக்கற்றவர் களாகவும் கோழை களாகவுமே உள்ளனர்.

இனி தொழில் துறை வகுப்புக்கு வருவோம். இவையும் நடுத்தர வகுப்பையும் வேறு பிரித்தறிய வேண்டும். நடுத்தர வகுப்பு என்பது சிறு அளவான உடைமைகள் உடையது. தொழில் துறை வகுப்பு என்பது உண்மையில் ஊதியம் பெறும் வகுப்பேயாகும். ஆனால் அவர்கள் தம் தொழில் துறையறிவு காரணமாக உழைப்பாளிகளை விடப் பன்மடங்கு ஊதியம் பெற்றுத் தொழில் வாழ்வுக்கு இன்றியமையாதவர்களா யுள்ளனர். மேலும் வரன்முறையாக இவர்கள் தம்மைப் பொதுவான கூலி உழைப்பாளியைவிடச் சமூகத் துறையில் உயர்வுடையவர் களாகவே கருதிக் கொள்கின்றனர். அவர்கள் சமூக நிலைகளைக் காண இது ஓரளவு சரியே. முதலாளிகூட இந்நிலையை உயர்தர நிலையென்று ஒத்துக் கொள்கிறான். இந்தியாவில் இத்தொழில் துறை வகுப்பு மிகமிகச் சிறிய அளவினது. மேலும் அது நகர்களிலும் பட்டணங்களிலும் மட்டுமே இருக்கிறது. இந்நாட்டில் பெரிய தொழில் முயற்சியோ வாணிக முயற்சியோ ல்லாத காரணத்தால் இவ்வகுப்பு போதிய வாய்ப்புக்கள், வழிதுறைகள் இல்லாதிருக்கின்றது. இதனாலேயே இந்நாட்டில் சிற்றூதியத்தில் வாழும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள், மருத்துவ அறிஞர், பொறியமைப்பாளர், கணக்கர் ஆகியவர் களைக் காண முடிகிறது. சமதர்ம முறை வருவதானால் இவ்வகுப்புக்கு எல்லாவகையிலும் நலமே. ஏனெனில் அவர்கள் தங்கள் அறிவையும் திறத்தையும் அதில் மிக நன்கு பயன்படுத்த முடியும்.

அடுத்தபடியாகக் கவனிக்கவேண்டியது தாழ்ந்தபடி நடுத்தர வகுப்பினர். இவர்களே குமாஸ்தாக்கள், கடைக்காரர், ஆசிரியர் ஆகியவர்கள். இவ்வகுப்பும் சிறிதே. ஆனால் இது