உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

99

வகுப்புக்களின் பேராட்களான ஐம்பெருங் குழுவினர் (பஞ்சாயத்தார்கள்) நிலையழிந்தனர். ஆகவே அவர்கள் வாடிக்கைக்காரர்களில் ஒரு வகுப்புக் குறைந்துவிட்டது. (மன்னர்களும் இல்லாதுபோகவே) பணம் கொடுத்துத் தொழில் செய்யத் தனி மனிதர் மட்டுமே மீந்தனர். தனி மனிதரோ பொதுவாக வரவர ஏழையாகிக் கொண்டே வந்தனர். அவர்களுக்குப் பணம் கொடுப்பதும் தொழில் முறையில் பலன் தரவதாயில்லை. ஆயினும் புதிதாக வளர்ந்துவரும் தொழிலுக்கு அவர்கள் நிதியளிக்கக்கூடும். ஆனால் தொழிலுக்கோ தனிப்பட்ட தொல்லைகள் இருந்துவந்தன. தொழில் முயற்சிகள் அடிக்கடி அழிவுற்று (திவால் அல்லது தீவாளியாகி) வந்தன. புதிய அரசியலோ (அதாவது பிரிட்டிஷ் அரசோ)வெனில், இந்திய நிதித்துறையாளனிட மிருந்து கடன் வாங்குவதை விடப் பிரிட்டிஷ் நிதித்துறையாள னிடமிருந்து கடன் வாங்கவே விரும்பிற்று. இந்நிலையில் நன்றோ, தீதோ தனி மனிதன் தோளிலேயே அவர்கள் தம் முழுப்பளுவையும் சுமத்த வேண்டியவராயினர். பொதுவாக இந்தத் தனி மனிதன் குடியானவனாகவே வந்தமைந்தான். அவன் கட்ட நட்டங்கள் வரவர மிகுதியாகி அவன் கடன்களும் மீட்க முடியாதவையாயின. இறுதியாக நிதித்துறையாளனுக்குப் பயிர்த் தொழில் பற்றி எதுவுமே தெரியாதாயினும் வேறு வழியில்லாமல், அடிக்கடி தன் விருப்பத்திற்கு மாறாகவே நிலத்தைக் கைப்பற்ற வேண்டிய வனானான். இங்ஙனமாக இந்தியாவில் மற்ற நாடுகளை விடப் பெருத்த விழுக்காட்டில் முதலீடு நிலத்தில் சென்று சிக்கியது. இதன் பயன் யாது? மெய்யாக உழவர்களாயிருந்தவர் நிலமற்ற குடியான வராயினர். வறுமையும் பன்மடங்கு கொடியதாயிற்று. இவ்வகுப்பு நேரடியாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடுமைக்காளாகாவிட்டாலும் மறைமுகமாக ஆயிற்றென்றே கூற வேண்டும். இதனால் அதன் போக்கும் இங்கும் அங்குமாக ஊசலாடித் தயங்கியதாகவே இருக்கிறது. ஒரு வகையில் தொழில் வளர்ச்சிக்கு அவர்கள் ஒரு பளுவாகவே உள்ளனர். ஏனெனில் நிலத்தைப் பற்றி ஒன்றும் அறியாமலே நிலமுதலாளிகளானது போலவே இன்று தொழில் பற்றி எதுவுமறி யாமலும் அதுபற்றி அக்கரையில்லாமலும் அவர்கள் தொழில் முதலாளிகளாகவும் ஆகியுள்ளனர்.டால்மியாக்கள், பிர்லாக்கள், சாக்ஸெரியாக்கள்