உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

105

முறை) நடப்பிலிருக்கிறது. இதுவும் இங்கிலாந்திலுள்ள நில உடைமை முறையைப் பின்பற்றி இந்தியாவில் ஏற்பட்ட புது முறையேயாகும். இங்கும் பகுதி விளைவு, பகுதி பணமா யிருந்த வரி முறை தவிர்க்கப்பட்டு, முழுதும் பணமாக வரி வரையறுக்கப் பட்டது. இவற்றின் பலனாகக் கூட்டுக் குடும்ப முறை அழிவுற்றது. ஒவ்வொரு தலைமுறையிலும் நிலம் வரவரத் துண்டுபட்டுக் கொண்டே வந்தது. இத் துண்டாட்டத்தின் கோரவிளைவுகளால் பல நிலங்கள் பொருளியல் முறையில் பண்படுத்தக் கூடாத சிறு அளவுகளாய் உள்ளன. அதாவது பயிரிடுபவனுக்கு அது வாழ்க்கை செலவுக்குக் கூட உதவுவதில்லை. நிலவரி முறையும் பயிரிடுபவனுக்குப் பாதகமாகவே நிலவிற்று. ஏனெனில் பயிர் விளைச்சல் எவ்வாறாயினும் அவன் வரிக்கடனைக் கொடுத்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

மூன்றாவதாகப் பிரிட்டனின் ஏகாதிபத்திய பொருளிய லமைப்பு காரணமாகத் தாழ்ந்த பண்புடைய பருத்தி, சணல், எண்ணெய் விதைகள் ஆகிய மூலப் பொருள்கள் பிரிட்டனின் தொழில்களுக்குத் தேவைப்பட்டதன் காரணமாக இப்புதிய சரக்குகளுக்கு இந்தியாவில் தேவை பெருக்கப்பட்டது. இதனால் முன்பு உணவுப் பயிர்களும் கால் நடைத் தீனிப் பயிர்களும் விளைவித்த நிலங்கள் வரவர மிகுதியாக இப் புதுப்பயிர்களை விளைவிக்கும் நிலங்களாக மாறின. இவை உடனடி பணம் தந்ததாயினும் நாட்டின் உணவுப் பொருள் உற்பத்தி இதனால் குறைவுற்றது. அத்துடன் இப்புதுப் பயிர்களின் தன்மையால் நிலமும் உரமிழந்து கேடுற்றது. இது மட்டுமோ? மூலப் பொருள்களுக்கான தேவை எப்போதும் ஒரு நிலையாய் இருப்பதில்லை. அது ஏற்றத் தாழ்வடைந்து வந்தது. அத்துடனே குடியானவர் வகுப்பின் வாழ்வும் உயர்ந்து தாழ்ந்து அல்லற்பட்டது. பெருநிலக்கிழமை முறை, புதிய வரி முறை, நிலத் துண்டாடல், பயிர்த்தொழிலின் புதிய பொருளியல் மாறுபாடு ஆகிய இத்தனை மாறுபாடுகளும் சேர்ந்து குடியானவர் வகுப்பின் அழிவை விரைவுபடுத்தின.

நாம் மேலே குறித்துள்ளபடி சிறு தொழிலாளர் வகுப்பு தொழிலிலிருந்து தள்ளப்பட்டு நிலத்திலே வந்து சேர்ந்து அதிலுள்ள நெருக்கடியை மிகுதிப் படுத்திற்று.1860 முதல் உழவுத்