உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

117

ஒரு பாதி நில முதலாளிகளுக்கு உரியதாயிருக்கிறது. இந்நில விளைவில் பாதி இவ் 'ஓட்டுயிர்' வகுப்பைக் கொழுக்க வைக்க மட்டுமே உதவுகிறது.அவர்கள் வேலைத் துறையில் ஒரு சுண்டுவிரல்கூட அசைப்பதில்லை. அவர்களால் நிலத்துக்கு எவ்வகைப் பயனும் கிடையாது. ஆகவே சமதர்மத்தின்மூலம் நிலத்திலிருந்து அகற்றப்படும் வீண் சுமையின் அளவு எவ்வளவு பெரிதென்றுகூறத் தேவையில்லை.

நில உடைமையில் மாற்றம் ஏற்படுத்துவதே சமதர்ம அரசியலின் முதல் வேலையாயிருக்கும். ஆயினும் இந் நடைமுறைகூட இவ்வகையில் ஒரு தொடக்க நடைமுறை மட்டுமே. அடுத்த படிமுறை தேசத்தின் உணவுத் தேவை, மூலப்பொருள் தேவைகளை மதிப்பிட்டுக் குறைந்த அளவு மக்கள் தேவையையும் தொழில்துறையின் தேவையையுமாவது நிறைவு படுத்துமளவு உற்பத்தியைப் பெருக்குவது ஆகும். இதனால் பெரும்பசியுடனிருக்கவோ, மூலப்பொருள் வரவுக் குறைவால் எந்தத் தொழிலும் முடக்கப்படவோ நேரமாட்டாது. இந்நிலையை எளிதாக்கும்படி இவ்வுணவையும் இம்மூலப் பொருள்களையும் உழவன் விளைவிப்பதற்கு வேண்டிய உரம், உழவுக் கருவிகள், சேமிப்பு வசதிகள், வர்த்தகக் கள வசதிகள் முதலிய சாதனங்களை உழவன் பெறுவதற்கான பொறுப்பை அரசியல் ஏற்றுக்கொள்கிறது. இவையனைத்தும் அவற்றிற்கான செலவு மட்டும் கட்டும்படியான குறைந்த அளவு விலையிலோ, அல்லது முடியுமானால் விலையில்லாமலோ அவனுக்கு அளிக்கப்படும். உரத்தை இதற்கோர் எடுத்துக்காட்டாகக் கொள்வோம். இந்தியா முழுவதும் பசுவின் சாணம் முக்கியமான உரமாகப் பயன்படுத்தப் பெறுகிறது. இதைச் சேர்ப்பது முசிவான அட்டுப்பிடித்தசெயல், சமதர்ம அரசியல் இவ்வுரத்தை வலியுறுத்தாது. எலும்புரம் இதைவிட எளிதாக உற்பத்தி செய்யக்கூடியது. அது மலிவானதும்கூட. இயந்திரக் கலப்பை களுக்கே ஆதரவு அளிக்கப்படும். அவை எருதுகளை விட விரைவாகவும் திறம்படவும் உழைக்கின்றன நாளாவட்டத்தில் அவை குறைந்த செலவும் உடையவை. ஓர் இயந்திர ஓட்டியும் இரண்டு இயந்திர வேலையாட்களும் சேர்ந்து ஓர் இயந்திரக் கலப்பையை இயக்கி 28 கோடி எருதுகளின் வேலையைச் செய்துவிடுவர்.