உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

அப்பாத்துரையம் - 36

இன்னும் பளபளப்பு மாறா அங்கி ஒன்றும் மாசுபடாத வெண்ணிறத்துடன் களைப்பென்பதே இன்னதென்றறியாத குதிரையொன்றும் அவள் கைப்பட அவனுக்குக் கொடுத்தனுப்பி னாள். ஒரே ஒரு எச்சரிக்கை மட்டும் போகும் போது அவளால் அவனுக்குப் பன்முறை வற்புறுத்திக் கூறப்பட்டது. அவளைப் பற்றியோ, அவள் வரவைப் பற்றியோ எத்தகைய நிலையிலும் மனிதர் காதுபட யாதொன்றும் கூறப்படாதென்பதும், அங்ஙனம் கூறின் அவன் அவளை இழப்பான் என்பதுமே அது. லான்வால் அவ் வெச்சரிக்கைப்படி நடப்பதாக வாக்களித்து விடைபெற்றகன்றான்.

அவன் தன் சிறுகுடில் சென்று பார்க்கையில், அது முற்றிலும் மாறி ஒரு சிற்றரசன் மாளிகையினும் சிறப்புடைய தாய்ப் பொன் வெள்ளிக் கலங்களும், தந்தங்களாலும் மணி முத்துக்களாலும் இழைக்கப் பெற்ற இருக்கைகளும், நேர்த்தியான பணியாள் தொகுதிகளும் நன்கு அமைந்திருக்கக் கண்டான். கண்டு ஐயமறத் தன்னைக் காதலித்தவள் மண்மகள் அல்லள்; விண்மகளே என உணர்ந்தான்.

கினிவீயர் சூழ்ச்சி

அன்று முதல் அவன் ஈகை பன்மடங்காய் வளர்ந்தது. அவன் புகழ் அவன் பழம் புகழையும் மங்க வைத்தது. அரண்மனையைவிட நகரிலும் நகரை விட நாட்டிலும் அவன் செல்வாக்கு மிகுதியாகப் பரந்தது. கினிவீயர் ஒருத்தி மட்டிலும்தான் இப்போதும் அவனுடன் இன்முகம் காட்டாதவள். இப்போது முன் போலத் தன் புறங்கூறலால் அவன் கொடையைத் தடுக்க முடியவில்லை என்று கண்டு அவள் பின்னும் மனம் புழுங்கினாள். அவன் வட்டப் பலகை வீரர் பலரை அவனுக்கு எதிராக ஏவிப்பார்த் தாள். பலர் அதற்கு இணங்க வில்லை. இணங்கிய சிலரும் அவனிடம் முறிவு பெற்றார்கள். அவர்கள் வெட்டும் குத்தும் அவன் சட்டையின் பளபளப்பைக் கூட மங்க வைக்க வில்லை. ஏனெனில், அது தெய்வத்தச்சர்களால் மந்திரவன்மையுடன் இணைக்கப் பட்டிருந்தது. இவனை இனி எப்படி அவமதிப்ப தென்று கினிவீயர் அரசி ஆராய்ச்சி செய்தாள். ஒருநாள் அவள், ஆர்தர் வட்டப் பலகை முன் வீற்றிருக்கையில் அதனைச் சூழ்ந்து