உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

39

இருக்கும் வீரர்களை நோக்கி, வீரர்களே! மாதர் மதியாத வீரனும் ஒரு வீரனா?

யாரேனும் ஒரு பெண்ணனங்கைத் தலைவியாகக் காண்டு அந்நெஞ்சு ஒன்றையேனும் இருக்கையாகப் பெறாதவன் ஆற்றல் வீண் ஆற்றலேயாகும். ஆதலின் இங்குள்ள வீரர் ஒவ்வொருவரும் தம்மை உரிமையுடன் போற்றும் தன் உள்ளத் தலைவியர் பெயரை உரைக்கத் தவறார்,” என்றாள்.

வீரர் ஒவ்வொருவரும் பெருமிதத்துடன் தத்தம் விருப்புக் குரிய தலைவியரின் பெயரைக் கூறி அவர்களை வானளாவப் புகழ்ந்தனர். ஆயினும் ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கையாகத் தம் தலைவியர் மண்கடந்த அழகுடைய அரசி ஒருத்தி நீங்கலாக, பிற மண் மடந்தையரை விட மட்டுமே சிறந்தவர் என்று பேசினர். லான்வால் பெருந்தகையின் முறை வந்த போது அவன் ஒன்றும் கூறாது வாளா நின்றான்.

அவமதித்தலும் அவமதிப்படைதலும்

66

'உன்னைப் போற்றும் அழகி இல்லையா? இன்றேல் ஏதேனும் ஒரு பணிப்பெண்ணையேனும் விரும்பி அடையப் படாதா?" என்று கினிவீயர் அரசி அவனிடம் அவமதிப்பாகப் பேசினாள். அச்சுடுசொல்லால் ஏற்பட்ட உணர்ச்சி வன்மையில் லான்வால் தன்னை மறந்து "அங்ஙனம் ஏளனம் செய்ய வேண்டாம் அரசியே! தம்மைவிட அழகிலும் குணத்திலும் உயர்விலும் சிறந்த ஒரு மாது என்னை மணந்துளாள் என்று அறிவீராக! என்று வீறு பேசினான். தன்னைத் தன் வீரர் அவையிலேயே தனித்துப் பேசியது பொறாமல், அரசி சீற்றங் கொண்டு எழுந்து போய், “அத்தெறுதலையின் தலையைத் துணித்தாலன்றி நான் இனி வாழேன்," என்று தன் அறையினுட் சென்று தாழிட்டுக் கொண்டழுதாள்.

அரசனும் பிற வீரரும் கூடச் சினம் அடைந்து அவனைக் கண்டித்தனர். இவையனைத்தும் கொஞ்ச மேனும் லான்வாலை அசைக்க வில்லை. தன் தலைவியின் எச்சரிக்கையை மீறி அவளை இழக்க நேர்ந்து விட்டதே என்ற ஓர் எண்ணம் அவன் எண்சாண் உடலையும் ஒரு சாணாக்கிற்று. இனி என் செய்வது?