உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. காரத் பெருந்தகையின் அருஞ்செயல்கள்

விட்ஸன்' என்ற விழாக் காலத்தில் ஆர்தர் யாருக்காவது ஓருதவி செய்தல்லாமல் உணவு கொள்வதில்லை. ஓராண்டு அவ்விழாவின்போது அவர் அரண்மனை அலுவலாளாகிய கவெயின் பெருந்தகை, ஆர்தரிடம் வந்து, மூன்று குதிரை வீரர் வெளியே காத்திருப்பதாகக் கூறினார். அவர்கள் உள்ளே வந்தவுடன் முதல் வீரன் ஆர்தர் முன் மண்டியிட்டு நின்று, ‘அரசே, எனக்கு மூன்று வரங்கள் வேண்டும். ஒன்றை இப்போதே பெற்றுக் கொள்ளுகிறேன். மற்ற இரண்டை ரண்டையும் அடுத்த ஆண்டில் கோருவேன், என்றான்.

ஆர்தர் அப்படியே "அப்படியே ஆகட்டும்; உனக்கு வேண்டுவதைக் கேள்” என்றார்.

>>

வீரன், “ஓர் ஆண்டுக் காலம் எனக்கு அரண்மனையில் அடிசில் வேலையைத் தந்து உண்டியும் உடையும் தருக, என்றான். அரசர் அப்படியே உத்தரவிட்டார்.

பின் அரசர் வீரனிடம் “உன் பெயர் என்ன? யார்? எவ்விடத்திலிருந்து வந்தாய்?" என்று கேட்டார் வீரன். "சிலகாலம் இவற்றை மறைவாக வைத்திருக்க விரும்புகிறேன்” என்றான். அரசர் அதற்கும் இணங்கினார்.

வீரன் ஓர் ஆண்டுக்காலம் வேலைக்காரருடன் வேலைக் காரனாய் வாழ்ந்து வந்தான். ஆனால், என்ன தொழில் செய்தாலும் அவன் தன் கைகளை அழுக்கடையாமல் தூய்மையாக வைத்துக் கொண்டான். அது கண்ட வேலைக்காரர் அவனை அழகிய கையன் என்று பொருள்படும்படி போமென்ஸ் என்று அழைத்தனர்.

66

""

அடுத்த ஆண்டு விட்ஸன் விழாவின் போது தூய வெள்ளிய ஆடை உடுத்த லினெட் என்ற ஒரு மங்கை