உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
212 ||

அப்பாத்துரையம் - 14



) || _. சிறுவனாயிருந்த பெருஞ்சேரலின் பிள்ளையே இளஞ்சேரலிரும் பொறைக்குப்பின் வந்து ஆண்ட யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை என்று கருதப்படுகிறது. குட்டுவன் சேரல், தகடூர்ப் போரில் வீரமாள்வுற்றிருக்கலாம் அல்லது அதன்பின் உயிரிழந்திருக்கலாம் என்று உய்த்துணரப்படுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறை (16 ஆண்டு ஆட்சி; கி.பி.154- 170) மேற்கண்டவாறு, முந்திய பேரரசனின் தம்பி புதல்வன் ஆவான். தகடூர் எறிந்த பெருஞ்சேரலின் காலத்திலே உச்ச நிலைக்கு ஏறிய கொங்குப் பேரரசனின் வீறு, இளஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சியிலேயே அதன் முழு முழக்கமும் கண்டது. அவனைப் பாடிய புலவர் பாடல்களும் இதனை மெய்ப்பிக்கின்றன. ஏனெனில், அவர்கள் வழக்கமான பட்டங்கள் சூட்டி அவனைக் ‘குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை', ‘சேரமான் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை', என்றோ; கவிதை யணியான சிறப்பு அடைமொழிகளுடன் ‘பல்வேற் குட்டுவன்' வென்வேற் குட்டுவன்' என்றோ, பாடி அமையவில்லை. அவன் 'வென்றாண்ட நாடுகள்', புகழ் நகரங்கள், வெற்றிப் போர்கள் ஆகியவற்றைச் சுட்டியே இவர்கள் அவனைச் சிறப்பிக்கிறார்கள்.

நன்னன் ஆண்ட மேல் கொங்கு நாட்டின் வடகோடி எல்லை குறிக்கும் வானியாற்றையே சுட்டிச் 'சாந்துவரு வானி நீரினும், தீந்தண் சாயலன்' என்றும் (பதிற்றுப்பத்து); பூழி நாட்டையோ அதில் தொல் பழங்காலச் சேரர் இருந்தாண்ட நறா அல்லது நறவு (நறா-தேன்) என்ற சேரர் தொல்பழந் தலைநகரையோ, அதன் பேர் போன மாந்தை, தொண்டி ஆகிய துறைமுக நகர்களையோ அவன் ஆண்டான் என்ற முறையில் ‘எழுஉத்திணி தோள் பூழியர் மெய்ம்மறை இலங்கு நீர்ப்பரப்பின் மாந்தையோர் பொருந!’

'நாரரி நறவிற் கொங்கர் கோவே!'

வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!

என்றும்; கட்டிநாடும், புன்னாட்டுடன் அதன் தலைநகரான கட்டூரூம் ஆண்டவன் என்ற குறிப்பில் 'கட்டிப் புழுக்கிற் கொங்கர்