உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மாக்பெத் (Macbeth)

1. மாயக்காரிகள் வருபொருள் உரைத்தல்

ஸ்காட்லாந்து' என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த சிறிய நாடாகும். அதை டன்கன்2 என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய ஆட்சியின் கீழ் இருந்த சிற்றூர்கள் பலவற்றுள் கிளாமிஸ்' என்னும் ஓர் ஊர்க்கு மாக்பெத் என்பவன் தலைவனாக இருந்தான். அவன் அரசனுக்கு நெருங்கிய உறவினன்; அஞ்சாமை, ஆண்மை, ஆற்றல் எல்லாம் ஒருங்கு அமைந்தவன்; எனவே, அரசன் முதலான எல்லோரும் அவனை நன்கு மதித்திருந்தனர்.

ஒருமுறை உள் நாட்டில் பெரியதொரு குழப்பம் ஏற்பட்டது. அதனை அடக்கும் பொருட்டு அரசன் மாக்பெத்தையும் அவனுக்குத் துணையாகப் பாங்கோ என்னும் தலைவனையும் அனுப்பியிருந்தான். கலகப் படையுடன் அவர்கள் பெரும்போர் புரிந்தனர். மாக்பெத்தின் இணையிலா வீரம் அப்படையைச் சிதறடித்தது.

வெற்றியுடன் மீண்டுவந்த மாக்பெத், பாங்கோ இருவரும் வழியில் ஒரு காட்டைக் கடக்க நேர்ந்தது. அவ்வழியில் அவர்களுக்கு எதிரே பெண் உருவங்கள் மூன்று தோன்றின. அப்பெண் உருவங்களுக்குத் தாடி அமைந்திருத்தலை அவர்கள் கண்டார்கள். அவ்வுருவங்கள் மக்கள் உருவங்களாகத் தோன்றவில்லை. அவைகளை நெருங்கியவுடன் மாக்பெத், “நீங்கள் யார்?” என்று வினவினான். அப்போது முதல் உருவம் "கிளாமியஸ் தலைவரே! வாழ்க!” என்று மாக்பெத்தை வாழ்த்தியது. இதனைக் கேட்டதும் அவன் வியந்தான். “என் பெயர் இவர்களுக்குத் தெரியுமாறு எங்ஙனம்?' என்று