உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

66

41

'தங்களால் இப்பொழுது காரியமே கெடப்போகின்றது. போர்க்களத்தில் தாங்கள் காட்டும் வீரத்தை இன்றிரவு ஒரு நொடிப்பொழுது காட்டுதல் கூடாதோ? இன்றிரவு செய்யும் ஒரு செயல் என்றென்றும் இன்பம் தருமானால், அதனைச் செய்ய பின்வாங்குதல் ஆண்மையோ? எனக்குள்ள அஞ்சாமையும் தங்களிடம் இல்லை போலும்! பழி நேருமே என்று தயங்குதல் வேண்டா. அந்தப் பழியை வேலையாட்களின் மீதுசுமத்திவிடுதல் எளிது அன்றோ? இச்சமயம் தவறினால் எச்சமயம் வாய்க்குமோ? வேலையாட்களும் குடிவெறியால் நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். எழுங்கள்; உடனே முடித்துவிடுங்கள்,” என்று அவள் பற்பல கூற அவனைத் தூண்டினாள். அவனும் ஒருவாறு இசைந்தான்.

மாக்பெத்

கையிற் கட்டாரி

எடுத்துக்கொண்டு

அரசனுடைய பள்ளியறையை நோக்கிச் சென்றான். அப்போது அவனுடைய மன மயக்கத்தாற் பற்பல தோற்றங்களைக் கண்டான். வேறுகட்டாரி ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போலவும், அதிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருப்பது போலவும் அவன் தன் எதிரே கண்டான்.அதைக் கையில் பிடிக்கச் சென்றான் மாக்பெத். அது உடனே மறைந்துபோயிற்று. அவன் மேற்கொண்டிருந்த கொடிய செயலால் இத்தகைய மனமயக்கம் அவனுக்கு ஏற்பட்டது. இத்தோற்றங்களுக்கு அவன் ஒரு சிறிதும் அஞ்சிலன்; அரசன் படுத்திருந்த இடத்திற்குச் சென்று அவனைக் குத்திக் கொன்றான்.

உடனே, அங்குப் படுத்திருந்த வேலையாட்களில் ஒருவன் உறக்கத்திலே சிரித்தான். மற்றொரு வேலையாள், “கொலை, கொலை," என்று உறங்கிக்கொண்டே கத்தினான். இருவரும் விழித்தனர்; கனவில் பயந்ததாகத் தேறி, கடவுளை வணங்கிவிட்டு மீண்டும் உறங்கத் தொடங்கினர். இவ்விருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் மாக்பெத். அவனுக்கும் கடவுளைப்பற்றிய எண்ணம் எழுந்தது; அவனும் கடவுளை வணங்கி, அவரிடம் மன்னிப்புக் கேட்க முயற்சி செய்தான். ஆனால், அவனால், "கடவுளே” என்று வாயால் கூறமுடியவில்லை; எண்ணம் தோன்றியும் நா எழாமல் நின்றது.