உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

45

கலங்கினான். அவன் மனைவியும் கொடுமை நிறைந்த கனாக்கள் பலவற்றைக் கண்டு அஞ்சினாள். அவர்களுடைய ஆற்றல் அழிந்தது. தங்கள் நெஞ்சே தங்களைச் சுட்டதனால், அவர்கள் வாடி வருந்தினார்கள். “பாங்கோவைக் கொன்றது போல், அவன் மகனையும் கொல்ல முடியாமற் போயிற்றே! அவன் தப்பி ஓடிவிட்டானே! இப்போது நாம் என்ன செய்வோம்? மாயக்காரிகள் உரைத்தவாறே நமக்குப்பின் பாங்கோவின் மகன் அரசுரிமை பெறுவானோ?" என்று பற்பல எண்ணித் று துயர்க்கடலில் ஆழ்ந்தார்கள்; இரவும்பகலும் உறக்கமின்றி ஏங்கினார்கள்; இறுதியில் மாயக்காரிகளை மீண்டும் கண்டு எதிர் காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றையும் அறிய எண்ணி மாக்பெத் புறப்பட்டான்.

4. மாக்பெத் வாழ்க்கையை வெறுத்தல்

மாயக்காரிகளைத் தான் முதலில் கண்ட அந்தக் காட்டிற்கே அவன் சென்றான். அங்கு ஒரு குகையில் அவர்கள் இருப்பார்களென்று தேடினான். இவன் வருகையை முன்னமே அறிந்த மாயக்காரிகள், வினாக்களுக்கு ஏற்ற விடைகள் கொடுப்பதற்காகச் சில ஆவிகளை வருவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். மாக்பெத் அருகே வந்து சேர்ந்தான்."உன் வினாக்களுக்கு நாங்களே விடைகள் கூறவேண்டுமா? அல்லது ஆவிகள் கூறவேண்டுமா?” என்று மாயக்காரிகள் கேட்டார்கள். மாக்பெத் அஞ்சாமையுடன், “அந்த ஆவிகள் எங்கே?” என்று கேட்டான். அவர்கள் வருவிக்க, மூன்று ஆவிகள் அங்கு வந்தன.

அவற்றுள், முதல் ஆவி, “மாக்டப் என்னும் தலைவனைக் குறித்து நீ சாக்கிரதையாக இருப்பாயாக,” என்றது. மாக்பெத்துக்கும் மாக்டப்புக்கும் பெரும்பகை இருந்தது. ஆதலால், மாக்பெத் அந்த ஆவியின் கூற்று நன்மையானதே என்று கருதி, அதற்கு நன்றி கூறினான்.

இரண்டாம் ஆவி, “மாக்பெத்! நீ அஞ்சற்க, உறுதியோடு இரு; காலைக்குப் பின்வாங்காதே; உன்னை எவனும் கொல்லுதல் இயலாது” என்று கூறியது.

இதைக்கேட்டதும் மாக்பெத் மனம் தேறினான். “மாக்டப்! உன் பகை என்னை ஒன்றும் செய்யாது. இனி நான் அஞ்சுவேன்