உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

99

அவன் கூறினான்; சிங்கவேறு போல அவர்கள் தடையை விலக்கி, ஆவியுருவத்தைத் தொடர்ந்து நடந்தான்.

சிறிது தூரம் சென்றபின், தனிமையான இடத்தில் ஆவியுருவம் நின்றது; நின்று ஹாம்லெத்தைப் பார்த்து, “மகனே! நான் உன் தந்தையே ஐயுறல் வேண்டா. உன் சிற்றப்பன் என்னை அநியாயமாய்க் கொன்றான். வழக்கம் போல நான் பூங்காவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன். மெய்மறந்து நான் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையறிந்து அந்தக் கொடிய கிளாடியஸ் மெல்லென வந்து என் காதில் நச்சுச்சாறு ஊற்றினான்.அஃது என் உடலில் நரம்புத் துளைதொறும் பாய்ந்து செந்நீர் முழுதும் கெடுத்தது. மகனே; யாதொரு கவலையும் இல்லாமல் அமைதியாகப் பூங்காவில் உறங்கிக் கொண்டிருந்த என்னை வ்வாறு கொன்றான். அந்தப் பாவியாகிய என் தம்பி, என் அரசுரிமை, என் மனைவி, என் ஆரூயிர் இம்மூன்றையும் கவர்ந்தான் வஞ்சகன் மகனே; என்மீது உனக்கு உண்மையான அன்பு இருக்குமானால், நீ அவனைக் கொன்று பழிக்குப் பழி வாங்கியே தீர வேண்டும். இதை நீ மறவாதே. என்னுடைய வாழ்க்கைத் துணையாய் இருந்த உன் தாய், நன்றி கெட்டவளாய், என்னைக் கொன்ற பாவியை மணந்தாளே! அந்தோ! இதை நினைக்கவும் என்னால் கூட வில்லையே! போனது போக! நீ உன் சிற்றப்பனைக் கொன்று பழிவாங்கு. ஆனால், உன் தாயை ஒன்றும் செய்யவேண்டா, அவள் மனச்சான்றே அவளை வருத்தும்,” என்று கூறிவிட்டு உடனே மறைந்தது. அவ்வாறே செய்வதாக ஹாம்லெத் உறுதி பூண்டான்.

2. பித்தனாக நடித்தல்

ஹாம்லெத் தனியாக அவ்விடத்தில் நின்றான்; அப்போது, "இனி என் நினைவில் உள்ள எல்லாவற்றையும் மறப்பேனாக, நூல்களில் கற்றவையும் பிறவாறு அறிந்தவையும் என் நினைவிலிருந்து நீங்குவனவாக. எல்லாவற்றையும் மறந்து, என் தந்தை கூறியனவும் அவர் இட்ட கட்டளையையுமே நான் எண்ணிக் கொண்டிருப்பேனாக," என்று துணிவு கொண்டான். ஆவி சொன்னவற்றைத் தன் உயிர்த் தோழன் ஹொரேஷியோ தவிர வேறொருவர்க்கும் அவன் கூறவில்லை. அன்றிரவு கண்ட