உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

4. கலங்கிய நீர்

அப்பாத்துரையம் – 37

அதுகேட்ட நகர்த்தலைவன் அதன் உண்மைத் தெளிவுபடுத்த எண்ணி வலந்தைனிடம் சென்றான். சென்று விரைவாக எங்கோ செல்பவன் போல் பரபரப்புடன் நின்ற அவனிடம் “அன்ப, இவ்வளவு விரைந்து போகும் காரியம் யாது?' என்று கேட்டான்.

வலந்தைன், “வெரோணா செல்லும் தூதன் ஒருவனிடம் அங்குள்ள நண்பர்களுக்குக் கடிதம் கொடுத்தனுப்பப் போகிறேன்”என்றான்.

தலைவன்,“அவ்வளவுதானா? எனக்குக் கொஞ்சம் அரசியல் காரியங்களைப் பற்றி ஆராயவேண்டும்" என்று கூறி அவனைத் தாக்காட்டினான். வலந்தைன் வெளிக்கு அமைதியாகப் பேசமுயன்றாலும், உள்ளே பொறுமையிழந்து குமுறுவதைக் குறிப்பாகக் கண்டும் காணாதது போல் அவனைப் பின்னும் நயமாக வாட்ட எண்ணினான்.ஆதலால் தன் புதல்வியின் பேச்சை எடுத்து, அவள் தன் எண்ணப்படி தூரியோவை மணக்க விரும்பாததால், அவளுக்கு உடைமையில்லாமல் வெற்றுடம்புடன் யாரையேனும் மணக்கும்படி விடுவதாகவும், தான் இரண்டாவது மணம் செய்துகொள்ள விரும்புவதாகவும். அதுவகையில் வலந்தைன் உதவ வேண்டும் என்றும் திறம்பட வினாவினான்.

அப்போது சூதறியாத வலந்தைன், “நான் அதில் எவ்வாறு உதவக்கூடும்?” என்றான்.

தலைவன், “ஏன், நண்ப, எம்போன்ற முதியவர் காதலியை வசப் படுத்தும் வகையறியாதவர் அன்றோ? மேலும், காதலர் நடைமுறைகளும் காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன.எனக்குப் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறையை அறிவிக்கலாகாதா?

வலந்தைன் கபடின்றித் தலைவன் கேட்ட வகையில் விரிவான நல்லுரைகள் தந்தான். தலைவன் அவள் நாணமுடையவள் எதுவும், பகலில் பேச அஞ்சுகிறாள் எனவும் கூற, வலந்தைன் இரவு காண்பது நன்று என்றான்.

தலைவன், இரவு அவள் மாளிகை தாழிடப்பட்டுக் காலுடைய தாயிருக்குமே என்ன, வலந்தைன் தன் மனத்து