சேக்சுபியர் கதைகள் - 2 2
291
அல்லது அரசர் யாம் அல்லேம் என்றுகூட நீங்கள் உங்களுக்குள்ளாகவே முடிவு கட்டிவிட்டீர்களே?" என்றான்.
தனது திட்டம் முற்றும் அரசர் வாயிலிருந்து வருவது கேட்டு நார்தம்பர்லந்து உள்ளூர மகிழ்ச்சியடைந்தும் வெளிக்கு ஒன்றும் அறியாதவன் போலச், "சிவசிவ! என்ன சொற்கள் சொன்னீர்? குடிகளாகிய எமக்குத் தமது அரசுரிமையை எதிர்க்கத் துணிவு வருமோ? யாம் வறிதே எம் உரிமைக்காக மன்றாட வந்துள்ளோம். தாம் என் தலைவர் ஹென்றி ஹெரிபோர்டு பாலிங் புரோக் கோமகனுக்குச் செய்த தீங்கை அகற்றி அவரை ஏற்றுக்கொள்ளும்படி மட்டும் வேண்டுகிறோம்” என்றான்.
தேன் பூசிய நஞ்சே போன்ற அவனது நயவஞ்சக மொழிகள் கேட்டு ரிச்சர்டு தான் இதுகாறும் இயற்றிய பிழைகளை ஒரு நொடி எண்ணிப் பார்த்து, "ஆம், இன்று வருந்துவதாற் பயனென்? இப்பெருமக்கள் குழுவை வரம்பில் வைக்கத் தவறினேன். பொதுமக்களின் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் பெறத் தவறினேன்.நகத்தாற் கிள்ளி பகைவன் இப்போது கோடரியால் தறிப்பினும் தறிபட முடியாத அளவு வளர்ந்து விட்டானே! என் அரசாட்சி இருந்தவாறு என்?” என்று வருந்தினான்.
பின் அணைகடந்த வெள்ளத்துக்கு என் செய்வதென்று மனந்தேறி நார்தம்பர்லந்தை நோக்கி அவன் "சரி, உம் தலைவனிடம் போய் அரசனைக் காணலாம். கண்டு தம் உரிமைகளைப் பெறலாம் என்று சொல்க!" என்றான்.
இத்துடன் ரிச்சர்டின் நா நின்றிருந்தால்கூட ரிச்சர்டின் வீழ்ச்சி தடைப்பட்டிருக்கலாகும். ரிச்சர்டு பாலிங் புரோக்கின் பெருநிலக் கிழமையை விட்டுக்கொடுத்திருந்தால், தற்காலிகமாக வாவது பாலங் புரோக் தன் படைகளைக் கலைக்கவேண்டி வந்திருக்கலாம்.ஆனால், பெரிய தேரின் போக்கை மாற்றும் சிறு சறுக்குக்கட்டை போன்றதொரு நிகழ்ச்சி போன்றதொரு நிகழ்ச்சி இச்சமயம் ரிச்சர்டின் தீவினைப் பயனால் நிகழ்ந்து, அவனது தீய நாவைத் தூண்டிற்று. வெளியே சென்று கொண்டிருந்த நார்தம்பர்லந்து, 'தன் தலைவர் தர இணக்கம் பெறவில்லையே' என்று நினைத்துத் திரும்பி வந்தான். 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்