உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

  • மறைமலையம் - 23

மேற் படையெடுத்துச் சென்று, கி.பி. 846 முதல் 866வரையில் அரசாண்ட சிங்கள அரசன் முதலாஞ் ‘சேனனை' முறியடித்து, அவனது தலைநகராகிய அநுராதபுரத்தையும் அழித்தன னாகை யால்," அப்போது இலங்கைப் பௌத்தர்களும் அவர்களின் அரசனும் மாணிக்கவாசரோடு வழக்கிடுதற் பொருட்டுத் தில்லைக்கு வந்தாரென்றல் ஒரு சிறிதும் ஆகாமை காண்க. எனவே, சோழவேந்தர் இலங்கை மன்னரைத் தங்கீழ் அடக்கிப் பொலிந்தும். இந்தியா இலங்கையிற் பௌத்தசமயம் ஓங்கிக் கிளர்ச்சிபெற்றிருந்ததும், திருவிளையாடலிற் சொல்லப்பட்ட சிவனடியானான வரகுணபாண்டியன் தனது பாண்டி நாட்டளவில் அமைதியுற்றிருந்தது மெல்லாம் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னரே யாகையால், மாணிக்கவாசகர்க்கும் இலங்கைப் பௌத்தர்க்குந் தில்லையிற் சோழவேந்தன் அவைத் தலைமையில் நடைபெற்ற வழக்கு கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதிக் கண்ணதாதல் ஐயுறவின்றித்

துணியப்படுமென்க.

அதுவேயுமன்றி அடிகள் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தவராயின், அக்காலத்திற் சோழர்கள் வலியொடுங்கிப் பல்லவ வேந்தர்கள் வலிமிகுந்திருந்தமையின், அப் பல்லவர்களை ஒரு சிறிதாயினுங் குறிப்பிடாதிரா மற்று அவர் அவர்களை ஒரு சிறிதாயினுங் கூறாது.

66

தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்கன் வரக் கூவாய்”2 என்று சேர சோழ பாண்டியர் மூவரையே தமது திருவாசத்திற் குறிப்பிட்டு அருளிச்செய்திருக்கின்றார். அவர் பல்லவர் ஆட்சிக்காலத் திருந்தனராயின். அங்ஙனமிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் "பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும்” என அவர்களைக் குறிப்பிட்டு அருளிச்செய்தவாறு போற் றாமும் எங்காயினும் அருளிச் செய்திருப்பர். அவ்வாறின்றிச் சேர சோழ பாண்டியரென்னும் மூவரையே அவர் குறிப்பிட்டிருத்தலின், அவர் இத் தமிழ்நாட்டில் அம் மூவேந்தரது ஆட்சியைத் தவிரப் பிறிது ஏதுங் கலவாதகாலத்து. அஃதாவது நான்காம் நூற்றாண்டிற்கு முன், இருந்தவரென்பது தெற்றென விளங்கா நிற்கும்.

னி, ‘மணிமேகலை' என்னும் அரும்பெருந் தமிழ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/31&oldid=1588273" இலிருந்து மீள்விக்கப்பட்டது