உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

45

புதுவது புனைந்த அறிவியல் புரட்சியாகவும், புத்துலகு புனையும் ஆராய்ச்சியாகவும் கனிவுற்றது. அதன் பயனாக வெள்ளையர் வாணிபத்தையும் குடியேற்ற விரிவையும் குறிக்கோளாகக் கொண்டு பழைய உலகின் இருட்கண்டமான ஆப்பிரிக்காவிலும், புது உலகாகிய அமெரிக்காவிலும் புத்தம்புது உலகாகிய ஆஸ்திரேலியாவிலும் குடியேறி அவற்றின் வளங்களை ஆய்ந்து கைக்கொண்டு தம் வாணிப நலனையும் கைத்தொழில் வளனையும் பேணிக்கொண்டனர். அம்மூன்று கண்ட கண்டமும் பொன்னும் மணியும் புதைந்து கிடந்தவை யானபடியால் அவர்கள் வாழ்வில் அவை அளவற்ற செல்வக் குவியலைக் கொண்டு கொட்டத் தொடங்கின.

அவற்றுள் தங்கம் முதல்முதலாகக் கலிபோர்னியாவில் 1848-லும், ஆஸ்திரேலியாவில் 1851-லும், கிளான்டைக், அலாஸ்கா என்ற வட அமெரிக்கப் பகுதிகளில் 1890-க்கும் 1900-க்கும் இடைப்பட்ட காலத்திலும், தென் ஆப்பிரிக்காவிலுள்ள நேட்டாலில் 1927-லும் வெட்டியெடுக்கப்பட்டன. ஐரோப்பாவில் இதே நூற்றாண்டில் ஆஸ்திரியாவிலும் உருசியாவிலும் பொன் அகப்பட்டன. 1880-இல் இந்தியாவில் மைசூரில் உள்ள கோலாற்றில் தங்கம் வெட்டியெடுக்க ஏற்பாடாயிற்று.

இம் முயற்சியுளெல்லாம் பழைய உலகமாகிய ஆசியா ஐரோப்பா பொன் விளைவில் பிந்தி இருப்பது காணலாம். ஆசியா பிந்தியிருப்பது முயற்சியின்மையாலேயே என்று எண்ணவேண்டும்; பிற பொருள்கள் வகையிலும் இந்தியாவின் செழுமை அண்மை வரையில் பயன்படுத்தப் பெறாமலேயே இருந்து டாடா (Tata) முதலிய சில செல்வர் ஊக்கத்தினால் மேம்பாடடைந்தது போலப் பொன் வகையிலும் மேம்பாடு கிட்ட இடமுண்டு பொதுப்படத் திண்பொருள்கள் வகையிலும் தொடுபொருள்கள் (minerals) வகையிலும் இந்தியாவில் விந்தியமலைச்சாரலும் மேற்குத் தொடரும் ஒப்பற்ற வண் மையுடையவை என்று எண்ணப்படுகின்றன. தமிழராவோர் வளத்திற்கு உறைவிடமும், தமிழும் தென்றலும் பிறந்ததாகச் சொல்லப் படுவதும், அகத்தியர் கல்லையும் இரும்பையும் பொன்னாக்கும் பிற சித்தர் சூழ இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுவதும் ஆன வண் பொதிகையைக் கூட ஆராய்ந்து அதன் செல்வத்தின் அளவை அறிய முயன்றிலர் தமிழர்!