உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 39

மாயக்காரனைத் தவிர யாரையும் தான் கண்டதில்லை என்று மறுத்தாள்.

அவள் பொய் சொல்கிறாள் என்பது பற்றி அவனுக்கு இப்போது ஐயப்பாடு இல்லை. அவள் வாழ்வு தன்னைவிட்டு எவ்வளவு தூரம் சென்று விட்டது என்பதை அந்தப் பொய்யே அவனுக்குத் தெரிவித்தது. ஆயினும் அவன் அமைதியிழக்க வில்லை. 'பொய்யைப் பொய்யால் தான் வெல்ல வேண்டும்; ஆத்திரத்தால் வெல்ல முடியாது' என்பது அவன் தத்துவம். அவன் அவளை ஐயுறாததுபோலக் காட்டிக்கொண்டான். 'என் உடல் வலிமை கெட்டு வருகிறது, அதற்கு என் அன்பைவிட உன் அன்பு குறைவாய் இருப்பதே காரணம் என்று கருதுகிறேன்” என்று மட்டும் நயமாகக் கூறினான்.

பேச்சினிமையில் மார்கழி தன்னை மறந்தாள்.

“நீங்கள் கூறுவது சரியல்ல. ஏனெனில் நீங்கள் சொல்லுகிற படி புதிதாகப் பழகியவருக்குத் தான் வலிமை இன்னும் குறைவாயிருக்க வேண்டும்" என்றாள்.

சொல்லி வாய் மூடுவதற்குள் அவள் தன் பிழையை உணர்ந்து கொண்டாள். ஆனால் சொல்லிய சொல்லைப் பின் வாங்குவது எப்படி? மாயக்காரன் முகம் ஒரு கணத்தில் படமெடுத்த நாகமாயிற்று. அவளது நீண்ட கூந்தலை அவன் பற்றி இழுத்தான். கையிலிருந்த வாளால் அதை ஒட்ட அறுத்தான். மொட்டைத் தலையுடன் அவளை அவ்விடத்திலிருந்து அகற்றி ஆள் நடமாட்டமற்ற ஒரு பாலைவனத்தின் நடுவில் தன் மாயத்தால் கொண்டு விட்டான். 'எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம்' என்றறியாமல் அவள் பாலைவனத்தில் திசை தெரியாது சுழன்றாள்.

மாயக்காரன் அத்துடன் விடவில்லை. தன் புது வாழ்வை அழித்த இளைஞன் யாராயினும் கண்டறிந்து பழிவாங்க அவன் துடிதுடித்தான். கத்தரித்தெடுத்த மார்கழியின் கூந்தல் அவனிடமிருந்தது. அதனுடன் அவன் மீண்டும் கோபுரத்தினுள் சென்று தங்கினான்.

நடந்தது எதுவும் தெரியாத இளவரசன் வழக்கம் போலக் கோபுரத்தடியில் வந்து காத்திருந்தான். மாயக்காரன் இறங்கிச்