மருதூர் மாணிக்கம்
159
'புத்தகங்களை நாம் மறைத்து விடலாம். ஆனால் இந்தச் செய்தி மாரியப்பனுக்குத் தெரியக்கூடாது. அதேசமயம் புத்தகங்கள் போனது பற்றி அவன் புண்படவும் கூடாது. அப்போதுதான் நம் திட்டம் வெற்றி பெறும்.
66
'இதுபற்றி நான் நன்கு சிந்தித்திருக்கிறேன். இளைஞர்கள் எது செய்தாலும் பாரத வீரன் ஐயப்படாமல் ஏற்று நடக்கிறான். ஏனென்றால், அவன் போக்குப்படியே அவர்கள் காரியம் செய்கிறார்கள். நாமும் அப்படியே செய்யவேண்டும்.
"புத்தகங்களை இரண்டு தலைமுறைக்கு யாரும் காணாதபடி, கோயிலின் உள்ளறையில் பூட்டிவைத்து விடலாம். அதேசமயம் புத்தகம் இருக்கும் அறையையும் சுவர்கட்டி மறைத்து விடுவோம். இரவே ஒரு பூதம் வந்து புத்தகங்களுடன் அறையையும் தூக்கிக்கொண்டு போய்விட்டது என்று கதை கட்டுவோம். அவன் இத்தகைய கற்பனையை நம்புவது உறுதி” என்றான்.
பட்டரும் பெண்டிரும் கோமாறன் கற்பனைத் திறத்தை வியந்தனர்.
ஏடுகள் மாலையிலேயே அப்புறப்படுத்தப்பட்டன. அன்றிரவே அவசர அவசரமாகப் புதுச்சுவர்கள் எழுப்பப் பட்டன. நூலகத்தின் வாயில்களும் பலகணிகளும் நாற்புறமும் அடைத்துப் பூசப்பட்டன. பூச்சுவாயோ, புதுச்சுவரோ இருந்த இடம் தெரியவில்லை. ஏனென்றால் அவற்றின் மீது கரித்தூளும் தூசியும் கலந்து நயம்படத் தூவப்பட்டன.
பாரத வீரன் நூலகத்தைக் காணாமல் திகைத்தான். பெண்டிர் கதைகேட்டு அவன் முதலில் வியப்புற்றான். ஆனால் பூதம் வந்த அரவத்தைக் கேட்டதாகக் கோமாறன் கூறினான். அறையைத் தூக்கிக்கொண்டு பூதம் வானில் பறந்ததைக் கண்டதாக, நன்னயப்பட்டர் தெரிவித்தார். இந்த விளக்கங்கள் கேட்டுப் பாரத வீரன் பூதத்தின் மீது சீறினான். “என் மீது இந்த இருளுலக மக்களுக்கு இவ்வளவு பொறாமையா? பார்க்கிறேன் ஒரு கை!" என்று கறுவினான்.
சீடர்கள் கதையை நம்ப மறுத்தனர். ஆனால் அவர்கள் பொறியில் அவர்களே அகப்பட்டுக் கொண்டார்கள்” அன்னை