உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

199

நிகழ்ச்சி முழுவதும் தெரிந்திருந்தால், கொன்றே இருப்பார்கள், இரக்கப்பட்டு, அரைகுறை உயிருடனே இருவரையும் விட்டுச் சென்றனர்.

பட்டிமந்திரி உருண்டு புரண்டு எழுந்திருக்க நடு இரவு ஆயிற்று. அவன் உதவியுடன் பாரத வீரன் எழுந்திருக்கக் கடைசி யாமம் ஆயிற்று. ஆனால் விடியுமுன் புறப்பட்டு விடுவது அவசியம் என்று பட்டிமந்திரி வலியுறுத்தினான். இதைப் பாரத வீரனும் அட்டியின்றி ஏற்றுக்கொண்டான். ஏனென்றால் எதிரிகள் ஊராரானாலும், கவந்தன் உறவினரானாலும், எதிரிகளே என்பதில் வாதத்துக்கிடமில்லை. வேதனையிலோ, மேலும் அடிபட முடியாது என்ற நிலைமையிலோ கூட இரண்டு கருத்துக்கு இடமில்லை.

அடி

நல்ல காலமாக இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் ஈடுபடாத உயிர் ஒன்று இருந்தது. அதுவே பட்டிமந்திரியின் கழுதை. அதை அவன் பெருந்தன்மையுடன் பாரத வீரனுக்குத் தந்தான். அதன்மீது அவனை அருமுயற்சியுடன் ஏற்றினான். கோவேறு கழுதை நொண்டி நொண்டியே நடக்க முடிந்தது. பாரத வீரனைக் கழுதைமேல் வைத்து ஒரு கையால் அணைத்துக் கொண்டு, கோவேறு கழுதையையும் நடத்திக்கொண்டு, அவன் மெள்ள மெள்ள நடந்தான்.

விடியுமுன் அவர்கள் ஒன்றிரண்டு கல் தொலை சென்று விட்டனர். அங்குள்ள ஒரு குளத்தங்கரையில் அவர்கள் இளைப்பாறினர்.