உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14. பட்டி மன்னன்

பாரத வீரனுக்கும் இளவரசிக்கும் திருமணம் அரச ஆடம்பரங்களுடனே நிறைவேறிற்று. பாரத வீரன் சார்பில் தனிக்காட்டுப் பண்ணை வேந்தன் எல்லாச் செலவும் ஏற்றான். இளவரசி சார்பில் அதுபோல யாவும் அரசியே ஏற்றாள். மணப்பந்தலிலேயே மணிப்புலவன் பாரத வீரனுக்கும் இளவரசிக்கும் பொன்முடி சூட்டினான். அதையடுத்துப் பாரத வீரனே பட்டி மந்திரியை மன்னனாக்கி முடிசூட்டு விழா ஆற்றினான்.

விழாக்காலத்தில் கூட இளவரசி கிளர்ச்சியற்றவளா யிருந்தாள். பாரத வீரன் அக்கரையுடன் என்ன கவலை என்று உசாவினான். அவள் தேம்பித் தேம்பி அழுதாள். எதுவும் கூறவில்லை. ஆனால் மணிப்புலவன் பாரத வீரனைத் தனியாக அழைத்து விளக்கம் கூறினான்.

பாரத வீரன் வெற்றிப் புகழால் வஞ்சிப் பூதம் என்ற அரக்கன் பொறாமை கொண்டிருந்தான். அவன் தன் மாயத்தால் இளவரசியை ஒரு ஆண்டுக் காலத்துக்கு ஆணாக்கிவிட்டான். அந்த ஆண்டு முடிவில், பட்டி மந்திரிக்குப் பத்தாயிரம் அடிகொடுத்தால்தான், மாயம் தீரும் என்றும் கூறினான்.பட்டி மந்திரி இதைச் சிறிதும் ஏற்கவில்லை. ஆனால் ஆண்டு முடிவில் தான் ஏற்கச் செய்வதாக மணிப்புலவன் வாக்களித்தான்.

பட்டி மன்னன் ஒரு சில நாட்களில் தன் நாட்டுக்குப் புறப்பட்டான். அந்த நாடு, மலை நாடு, அதன் குடிகள் வேட்டுவக் குடிமக்களாகவே வேட்டைக் காடேயாகும். குடிபடைகளும் குறவர் குறத்தியராகவே இருந்தனர். அவர்கள் புடைசூழ அவன் தந்தப் பல்லக்கில் புறப்பட்டான். நன்றி மறவாமல் அவன் தன் பழைய கழுதை நண்பனை இப்போதும் தன் பின்னால் அணி