உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

79

மறுநாளே அக்டேவியஸ் படை எகிப்தில் வந்திறங்கியது. அந்தோணியும் அவன் வீரர்களும் அதனுடன் கைகலந்து தாக்கினர். அக்டேவியஸ் படை அந்தோணியின் படையைவிட எவ்வளவோ பெரியதாயிருந்தும், அந்தோணியின் ஆற்றலுக்கும் அவன் வீரரர்களின் துணிச்சலுக்கும் ஆற்றமாட்டாது பின்னிடைந்தோடிற்று, ஸீஸர் தன் முழுத்திறனையும் காட்டி அவர்களைத் தன் கையாட்கள் மூலம் சாட்டையால் அடித்து ஆட்டுக் கூட்டங்களைப் போல் எல்லைப்புறத்தில் திரட்டிச் சேர்க்கவில்லையானால், அவர்கள் மீட்க முடியாதபடி சிதறியே

இருப்பர்.

ஆண்மைமிக்க அந்தோணியின் வீரர் இவ்வெற்றியால் பின்னும் ஊக்கம் அடைந்தனர். அவ்வெற்றியைத் தொடர்ந்து ஸீஸரின் படைகளை ரோம் வரைக்கும் துரத்தியோட்டி அவனை அழிக்க வேண்டுமென்று அந்தோணியின் துணைத் தலைவன் மன்றாடினான்.ஆனால் அந்தோணியின் இயற்கைக் சோம்பலும் இன்பவிழைவும் இவ்வின்றியமையாக் கடமையைச் செய்யக் காலந்தாழ்த்தின. வெற்றியைக் கொண்டாடும் வகையில் தன் பொருட்குவை முற்றிலும் தன் வீரரர்களுக்கு வாரி இறைத்தும் அவர்களுடன் உண்டாட்டயர்ந்தும் அவன் பொழுதுபோக்கினான். இதனைக் கண்டும் தன் நன்மொழிகளை அவன் புறக்கணித்தால் சினங்கொண்டும் அத்துணைத் தலைவன் அன்றிரவே அவன் எதிரியின் பக்கம் சென்று சேர்ந்து கொண்டான்.

ச்செய்தியைக்

கேட்ட அந்தோணி அவனிடம் எள்ளளவும் சீற்றங் கொள்ளாது மற்ற வீரர்களிடமும்“அவனைப் போலவே காலநிலைக் கொப்ப நீங்கள் நடந்து கொள்வதே எனக்கு விருப்பம்" என்று கூறினான். அதோடு ஸீஸர் பக்கம் சென்றவன் தனது ஆத்திரத்தில் விட்டுப்போன பொருள்களை அவனிடமே சேர்க்கும்படி கட்டளையிட்டான். உண்மையில் அந்தோணியிடம் நேசம் கொண்டு சீற்றத்தாலேயே எதிர்க் கட்சியில் சென்று சேர்ந்த அத்துணைத் தலைவன் இதுகேட்டுத் தன் நன்றியின்மையையும் தன் தலைவன் பெருந்தன்மையும் நினைத்துக் கண்ணீருகுத்தான்.

அந்தோணியும் அவன் வீரரும் இருந்த நிலைமையினை ஒற்றர் மூலம் அறிந்த ஸீஸர் தன் படையை இரவோடிரவாகத்