உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

அப்பாத்துரையம்

கதைச் சுருக்கம்

கொரார்டு அரிய மருத்துவன். அவன் இறந்தபின் அவன் மகள் ஹெலெனா ரூஸிலான் பெருங்குடியில் பணியாளாய் அமர்ந்தாள். பிரான்சு அரசன் நண்பனாகிய ரூஸிலான் பெருமகன் இறந்தபின் அவன் மகன் பெர்ட்டிரமை அரசன் அமைச்சர் மூலம் அழைத்துத் தன்னிடம் வைத்துக் கொண்டான். அவனிடம் உள்ளூறக் காதல்கொண்ட ஹெலெனா, அப்பகையில் ரூஸிலான் பெருமாட்டியின் துணைபெற்று அரசனிடம் சென்று அவனது பாண்டு நோயைத் தந்தையின் அருமருந்தொன்றால் குணப் படுத்தினாள். அரசன் மகிழ்ச்சியுற்று அவளுக்குத் தன் கணையாழியைக் கொடுத்ததுடன் அவள் விரும்பிய ஆடவனை மண முடிப்பதாகச் சொல்ல, பெர்ட்டிரமையே விரும்பி மண முடித்தாள். பெர்ட்டிரமையே விரும்பி மண முடித்தாள். பொட்டிரம் அவளை வெறுத்து ரூஸிலான விட்டுவிட்டுப் பிளாரென்சு சென்று, அங்கே படைத் தலைவனாய்த் தயானா என்ற பெண்ணைக் காதலித்தான்.

சின்னாளில்

மன வெறுப்புற்ற ஹெலெனாவும் வெளியேகித் திரிந்து, இறுதியில் தற்செயலாய் அதே பிளாரென்சில் வந்து தயானாவின் ஆரூயிர்த் தோழியாய் அவள் துணையால் அவளுடையில் பெர்ட்டிரமுடன் தனயிடமடைந்து, அவன் காதலைப் பெற்று, அவன் கணையாழியை வாங்கிக் கொண்டாள். இதற்கிடையில் ரூஸிலானுக்குச் சென்று மண மக்கள் பிரிவு கேட்டு வருந்திய அரசன், பெர்ட்டிரமையழைத்து ஹெலெனா பற்றி உசாவி, அவன் அவளை வெறுத்து வேறு பெண்ணைக் களவு முறையில் மணந்ததாகக் கூறினான். அதேசமயம் மறைவிலிருந்து ஹெலெனாவும் தயானாவும் வந்து கணையாழி காட்டிப் பெர்ட்டிரமின் மனத்தை மாற்றினர். பெர்ட்டிரம் ஹெலெனாவுடன் வாழ்ந்தாள். அரசன் உதவியால் தயானா இன்னொரு பெருமகனை மணந்தாள்.

1. கைக்கிளைக் காதல்

பிரான்சு நாட்டில்'கொரார்டு என்ற ஓர் அரிய மருத்துவன் இருந்தான். அவன் நோய் ஆராய்ச்சியிலும் மருந்தாராய்ச்சியிலும்