உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம்

உறவாடாவிடினும் இதுவரையிற் கண்ணாரவேணுங் காண முடிந்தது; இன்று அதற்கும் வழியில்லையே” என்று மன மாழ்கினாள்.

பெர்ட்டிரமை அழைத்துப் போக வந்த அமைச்சன் அரசவைக் காரியங்கள் பலவும் பேசிக்கொண்டிருந்தபோது, அரசன் பாண்டு நோயினால் வருந்துகின்றானென்றும், அதற்கு அரண்மனை மருத்துவர் அனைவரும் பற்பல மருந்துகள் கொடுத்தும் குணம் வந்தபாடில்லை என்றும் கூறியது அவள் நினைவிற்கு வந்தது. வரவே, அவள் மனத்தில் சில ஆழ்ந்த எண்ணங்கள் தோன்றின. “ஆ! என் தந்தை குறித்துத் தந்து போன புதுவகை மருந்துகளுள் பாண்டு நோய்க்கான மருந்தும் ஒன்றன்றோ? அதன் மூலம் ஒருவேளை என் எண்ணங்கள் ஈடேறுமாயின் எவ்வளவு சிறப்பாகும்” என்ற அவள் வாய்விட்டுக் கூறினாள்.

அவள் கூறிய மொழிகளை, அடுத்து நின்று கேட்டுக் கொண்டிருந்த ரூஸிலான் பெருமாட்டி, “அரசன் பிணியும், இம் மங்கை பிணியும் ஒருங்கே நீங்குதல் திருவுளமாயின், அஃது அங்ஙனமே நிறைவேறுக" என்று மனத்துட்கொண்டு, அவளை அரசன்பால் விடுத்தனள்.

ஹெலெனா, அரசனை அணுகுவதே முதலில் அருமையாக இருந்தது. அணுகியபோதும் அவள் மருந்தை அரசன் உட்கொள்ளுவதற்கு அவன் அவையோர் ஒருப்படவில்லை. இந்நிலையில், அரசன் காதலி இச்செய்தி விழுந்தது. தனது நல்வினைப் பயனால் தூண்டப்பட்டு அவன், “எப்படியும் நோய் குணமடைவதாகக் காணவில்லை. பிற மருத்துவர் அனைவரும் கைவிட்டனர். இப்புது மருந்தால்குணம் ஏற்படாவிட்டாலும் கேடென்ன? அஃது ஒரு வேளை என் உயிர் கொள்ளும் நஞ்சாய் இருந்தாலுங்கூட இவ்வேளைக்கு அஃது என்னை நோயினின்றும் தப்ப வைக்கும் கருவியாகவே அமையும்” என்று கூறி அவளை வரவிடுத்தான். பின்பு அவள் கொரார்டின் புதல்வி என்றும் மருந்து கொராட்டின் புது மருந்துகளுள் ஒன்று என்றும் கேட்டபோது அரசனுக்குப் பின்னும் நம்பிக்கை உண்டாயிற்று.

ரூஸிலான் பெருமாட்டியும் ஹெலெனாவும் கண்ட கனவு நனவாயிற்று. அம்மருந்து உட்கொண்ட இரண்டு மூன்று