உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

87

ஒப்பற்றவன். அந்நாளைய மருத்துவரறிவுக்கு அப்பாற்பட்ட பல புதிய மருந்து வகைகள் அவனுக்குத் தெரிந்திருந்தன.

கொரார்டுக்கு 2ஹெலெனா என்னும் புதல்வி ஒருத்தி இருந்தாள். கொரார்டு அவளுக்கு எத்தகைய பொருட்குவையும் வைக்கவில்லை. ஆயினும் அவன் தன் மருந்து வகைகளையும் அவற்றை வழங்கும் முறைகளையு மட்டும் அவளுக்குக் கற்பித்திருந்தான்.

தந்தை இறந்தபின் ஹெலெனா தன் தந்தைக்கு அறிமுகமான 3ரூஸிலான் என்ற பெருங்குடியிற் சென்று, பணியாளய் அமர்ந்திருந்தாள். அப் பெருங்குடியின் பெருந்தலைவனாயிருந்த பழைய ரூஸிலான் பெருமகனார் இறந்துவிட்டமையால், இளைஞனாகிய அவர் 4பெர்ட்டிரம் புதிய ரூஸிலான் பெருமகன் ஆனான்.

மகன்

பழைய ரூஸிலான் பெருமகனார் பிரான்சு அரசனுக்கு நெருங்கிய நண்பர். ஆகவே, அரசன் அவர் மகனாகிய பெர்ட்டிரமைக் காண விரும்பி அவனை அழைத்துவரும் பொருட்டுத் தன் அமைச்சனான 5லாபியூ என்பவனை, அவன்பால் அனுப்பினான். பெர்ட்டிரம் அவ்வமைச்சனுடன் புறப்பட்டு அரசனைக் காணச்சென்றான்.

ரூஸிலான் குடியில்

காலவடி வைத்து முதல் ஹெலெனாதன் நெஞ்சை முற்றிலும் பெர்ட்டிரமுக்கு பறிகொடுத்தாள். ஆயினும், தன் எழைமையும் துணையற்ற தன்மையும் எங்கே, அவன் உயர்குடியும் புகழும் எங்கே, என்று அவள் மனம் சோம்பினாள்.

பெர்ட் டிராமின் தாயான ரூஸிலான் பெருமாட்டி ஹெலெனாவின் மனநிலையை உய்த்துணர்ந்து கொண்டாள். அவள் பார்வைக்கு ஹெலெனாவின் ஏழைமையை விட அவள் அழகும் குணமுமே விளக்கமாகத் தோன்றின. ஆகவே அவள் ஹெலெனாவின் காதலுக்கு இணக்க மளித்தாள். ஆயினும், பெர்ட்டிரம் அவளை மதியாமல் அசட்டையாயிருந்தான். அதனால் அவள் மிகவும் மனச்சோர்வு அடைய நேர்ந்தது.

பெர்ட்டிரம் போனபோது ஹெலெனா, அவன் போன பக்கமே நோக்கி நின்று, “அந்தோ நெஞ்சாரக் கலந்து