உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அப்பாத்துரையம்

ரூஸிலான் பெருமாட்டி, முதலில், ஹெலெனாவுக்கு ஆறுதலாக,“பெர்ட்டிரம் சீற்றந்தணிந்து வருவான்; பொறுத்திரு,” என்று கூறிவந்தாள். ஆனால், திங்கள் ஒன்றிரண்டாயின. வரும் வகை எதுவுங் காணோம். ஹெலெனாவுக்கு, ரூஸிலான் பெருமாட்டிக்கோ, உலக வெறுப்புப் பின்னும் மிகுதியாயிற்று.

இந்நிலையில், பெர்ட்டிரமிடமிருந்து கடிதமொன்று வந்தது. வற்றற்பாலையில் நீர் வேட்கையாற் செயலிழந்தவன், நீரென்ற பெயரைக் கேட்டவுடனே உயிர்த்தெழுவது போல, ஹெலெனா உள்ளந்துடிக்க எழுந்து சென்றாள். ரூஸிலான் பெருமாட்டியும் எல்லாம் வல்ல இறைவனை வணங்கிக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். பார்த்தவுடனே அவள் கைகளும் உடலும் துடிக்க, “சீ சிறுமைப்பட்ட பதரே” என்றுகூறி நிலத்திற் சாய்ந்தாள்.

அக்கடிதத்தில், "பெர்ட்டிரம் மண நாளிற் கொண்ட வெறுப்புச் சற்றும் மாறாது. தாயே, ஹெலெனாவுக்கு உரியவன் நானல்லன்; அவள் உன்னையும் உன் குடியையும் பொருளையும் விரும்பினாளேயன்றி, என்னையோ என் காதலையோ விரும்பினவள் அல்லள்; அவற்றையே அவள் அடைக; நான் இனி அவளுக்கும் உனக்கும் உரிய அவ்வீட்டில் நுழையேன்,” என்று எழுதியிருந்தான்.

ஹெலெனாவின் உள்ளத்தில் பாலைப் புதர்போல் உலர்ந்து நின்ற கைக்கிளைக் காதலையும் இக் கடிதத்தன் தீமொழிகள் எரித்தன... “இத் தீயவனின் தீவினைக்காக, வீட்டுக்குரியவர் வீட்டைத் துறப்பதா? வேண்டாம்; நானே போய்விடுகிறேன்,” என்று மொழிந்து அவள் வெளியேறினாள்.ரூஸிலான் பெருமாட்டி எவ்வளவோ தடுத்தும், அவள் புலி கண்டு மருண்டோடுபவள் போல் ஓடினாள்.

2. மாதர் நட்பு

அப்பொழுது அவள் உள்ளம் பட்ட பாட்டை யாரே கணித்துக் கூறவல்லார்? ஒரு நேரம், 'காதலற்ற இவ்வுலகினின்று அகன்று விடுவோமா' என்று எண்ணுவாள். ஆனால் அடுத்த நேரம், ‘காதலனற்ற மறு உலகில் எங்ஙனம் சென்று வாழ்வேன்' என்று எண்ணி அலைக்கழிவாள்.