உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

66

93

"அவர் ஏதோ ரூஸிலான் குடியைச் சேர்ந்தவர் என்று என்னிடம் கூறினார்."

இவ்வுரை கேட்டதும் ஹெலெனா இடியேறுண்ட அரவமென அலறி வீழ்ந்து, “ஆ, கொடுமை கொடுமை; கட வுளே இதுவும் உன் திருவுள்ளமோ?” என்று புலம்பி மயங்கினாள்.

இப்போது, "அந் நங்கையர் இருவர் வாழ்க்கையையும் இருவேறு வகையிற் பாழ்படுத்தி வருபவர், இருவேறு மனிதரல்லர்; ஒருவரே,” என்பது அவர்களுக்கு விளங்கிற்று. அதுமுதல் அவர்கள் பெர்ட்டிரமைப்பற்றி முன்போல் கனிவுடன் உரையாடுவதில்லை. ஆனால், ஹெலெனாமட்டும் தன்னை வெறுத்த பெர்ட்டிரமை, அவன் விரும்பனும் தான் விரும்பாது ஆட்டி வைக்கும் இத்தோழி மூலமே தன் வயப்படுத்தலாம் என்று கருதி, அக்கருத்தைத் தயானாவிற்குத் தெரிவித்தாள். தயானாவின் தாய் பெர்ட்டிரமிடந் தன் மகளுக்குள்ள வெறுப்பையும், ஹெலெனாவின் துயரையும் கண்டு அவர்கள் ஏற்பாட்டிற்கு இணங்கினாள்.

3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது

தயானா என்றும் பெர்ட்டிரமை வெறுத்து அவன் காதலைப் புறக்கணித்தே வந்திருந்தாள். அவளும் அவள் தாயும் அவனிடம், "நீங்கள் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள். உங்களுடன் ஒத்த மண வாழ்க்கை கொள்ள எங்களுக்குத் தகுதியில்லை," என்று தெளிவாகத் தங்கருத்தை அறிவித்து மிருந்தனர். அவ்வாறிருந்தும், காதலின் தூய்மையை முற்றும் அறியாத பெர்ட்டிரம், மணவாழ்வு கிட்டாவிடினுங் கவலையில்லை; எவ்வகையிலும் அவளை அடைந்தே தீருவேன்,” என்று தனது சிற்றின்ப வேட்கை தோன்றக் கூறினான்.

66

கற்பிலும் தன் மதிப்பிலும் குறைவுறாச் செல்வர்களாகிய தயானாவும் அவள் தாயும் இத்தீமொழிகள் கேட்டு நெருப்பிற் பட்ட புழுவெனத் துடித்துப்பொங்கினும், ஹெலெனாவின் நன்மையை எண்ணித் தம்மை அடக்கிக்கொண்டு அவன் ஏற்பாட்டிற்கு

ணங்கியவர்கள் போல நடித்து, அவனைத் தயானா தனியே வந்து காணுவதற்கான இடமும் நேரமும் குறித்தனர். குறித்த நேரப்படி குறித்த இடத்தில் பெர்ட்டிரம் வர,